search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parrikar"

    சமீபத்தில் காலமான கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பனாஜி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.
    பனாஜி:

    கோவா முன்னாள் முதல் மந்திரி மனோகர் பரிக்கர் புற்றுநோய்க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சமீபத்தில் மரணம் அடைந்ததால் பாராளுமன்ற தேர்தலுடன் அவர் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த பனாஜி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தலில் நடந்தது.

    இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியான நிலையில் இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அட்டனாசியோ மான்செராட்டே 8,748 வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலியேன்கர் 6,990 வாக்குளை பெற்று தோல்வியை தழுவினார்.

    இந்த தோல்வியின் மூலம் சுமார் 25 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பனாஜி தொகுதியை தற்போது காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது. தனது தோல்வியை ஏற்றுக்கொண்ட பாஜக வேட்பாளர் சித்தார்த் குன்கோலியேன்கர் பனாஜி தொகுதியை பறிகொடுத்ததற்காக பாஜக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    கோவாவில் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய காலை அமர்வில் முதல்வர் மனோகர் பாரிக்கர் பங்கேற்கவில்லை. #parrikarskipsAssembly
    கோவா:

    கோவா மாநில சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. முதல்வர் மனோகர் பாரிக்கர், நேற்று சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று காலை சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது, மனோகர் பாரிக்கர் அவைக்கு வரவில்லை.

    பாரிக்கர் சட்டசபைக்கு வராததன் காரணம் தெரியாத நிலையில், அவர் பதில் அளிக்கவேண்டிய துறைகளுக்கான கேள்விகளை அடுத்த அமர்வுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் பிரமோத் சாவந்த் அறிவித்தார்.

    63 வயதான பாரிக்கருக்கு கணைய நோய் பாதிப்பு உள்ளது. உடல்நிலை சரியில்லாதபோதிலும் நேற்று அவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கோவாவின் மூன்று நாள் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #parrikarskipsAssembly
    ×