search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Papua New Guinea Earthquake"

    • பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மடாங் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.
    • நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த மோர்ஸ்பியில் இருந்து 300 மைல் வரையில் உள்ள நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

    ஜகார்த்தா:

    பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூகினியா நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் மடாங் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஏராளமான வீடுகளும் சேதம் அடைந்துள்ளன. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த மோர்ஸ்பியில் இருந்து 300 மைல் வரையில் உள்ள நகரங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. வாங்நகரில் இந்த நிலச்சரிவுக்கு 3 பேர் பலியானார்கள்.

    இந்த நிலநடுக்கத்தில் சிக்கி தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மலை கிராமங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதை அந்த பகுதி எம்.பி. கெஸ்சி சவாங் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நிலநடுக்கத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ஜேம்ஸ் மராப் கூறுகையில், 'இது மிகப் பெரிய நிலநடுக்கம்' என்றார்.

    ×