search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pakistan Candidates"

    பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை நடத்துகின்றனர்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் வருகிற 25-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதில் பல முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெற இந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை நடத்துகின்றனர்.

    பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் வேட்பாளராக சயீத் இம்ரான் ஷா வாலி பஞ்சாப் மாகாணம் சாகிவால் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அஜ்மீரில் உள்ள கவாஜாகளில் நவாஸ் மற்றும் சுபிதர்காவில் பிரார்த்தனை நடத்தினார்.

    2 தடவை எம்.பி. ஆகியுள்ள இவர் தனது மத குரு மூலம் பிரார்த்தனை செய்தார். முன்னாள் பிரதமர் ராஜா பரிவேஷ் அஷ்ரப் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர். ராவல்பிண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு மும்முனைப் போட்டி நடைபெறுகிறது. இவரும் அஜ்மீர் தர்கா மதகுரு மூலம் பிரார்த்தனை செய்தார்.

    பிரதமராக இருந்தபோது கடந்த 2013-ம் ஆண்டு இங்கு நேரில் வந்து பிரார்த்தனை செய்தார். தற்போது 2-வது தடவையாக பிரார்த்தனை மேற்கொள்கிறார். இந்த தேர்தலில் தனது பாகிஸ்தான் மக்கள் கட்சி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வேண்டும் என விரும்புவதாக கூறினார்.

    அண்டை நாடான இந்தியாவுடன் தனது கட்சி எப்போதும் நல்லுறவுடன் இருந்து வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அஜ்மீர் தர்காவின் மத குரு சயீத் பிலால் சிஸ்டி முக்கிய பிரமுகர்களுக்காக பிரார்த்தனை செய்தார்.
    ×