என் மலர்
நீங்கள் தேடியது "Paddy procurement abuse"
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது.
இதுதொடர்பாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
வேலூர் மாவட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்து நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக மகேஷ் (வயது 43) என்பவரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு செய்ததாக திருநெல்வேலி மண்டல மேலாளர் கோபிநாத் (45) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.






