என் மலர்
நீங்கள் தேடியது "Paal Dabba"
- தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ராப் பாடகராக இருப்பவர் பால் டப்பா.
- பால் டப்பா நடிகராக களம் இறங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ராப் பாடகராக இருப்பவர் பால் டப்பா. இவர் ஒரு இண்டிபெண்டண்ட் பாடகராவார். இவரின் பாடல்கள் புதுவித இசை, வரிகள் என ஜென் Z மக்களுக்கு பிடிக்கும் விதமாக அமைந்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் குரலில் வெளியான 3ஷா மற்றும் ஐ இண்டிபெண்டட் பாடல் மிகப்பெரியளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பாடலில் ரேப் போர்ஷன் பாடினார்.
இவர் குரலில் வெளியான இண்டிபெண்டண்ட் ஆல்பமான 170 CM, SAB, binge and Cringe , OCB, மற்றும் காத்து மேல பாடல் மிகப்பெரிய வைரலானது.
இந்நிலையில் பால் டப்பா நடிகராக களம் இறங்கியுள்ளார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்குகிறார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார். இப்படத்தில் தெலுங்கு நடிகரான ராஜ் தருண் கதாநாயகனாக நடிக்கிறார். அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.






