search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Operation warrant"

    • அரசு குற்றவியல் வழக்கறிஞர் பிடிவாரண்டுகளை உடனடியாக நிறைவேற்ற கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
    • நிலுவையில் உள்ள அனைத்து கோர்ட்டு பிடிவாரண்டுகளையும் நிறைவேற்றுமாறு அனைத்து மாநகர போலீஸ் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் பிடிவாரண்டு குற்றவாளிகளை பிடிக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் கோர்ட்டுகளால் பிறக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டுகள் குறித்து சென்னை ஐகோர்ட்டு போலீசாரிடம் அறிக்கை கோரி இருந்தது.

    இதுதொடர்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் பிடிவாரண்டுகளை உடனடியாக நிறைவேற்ற கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

    தமிழகத்தில் உள்ள கோர்ட்டுகளால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டுகளை நிறைவேற்றி சம்பந்தப்பட்டவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்த கடந்த (பிப்ரவரி) 28-ந்தேதி முதல் வருகிற (மார்ச்) 9-ந்தேதி வரை 10நாட்கள் ஆபரேஷன் வாரண்ட் என்ற பெயரில் நடவடிக்கையை போலீஸ் துறை மேற்கொண்டுள்ளது.

    இந்த நடவடிக்கையின் போது நிலுவையில் உள்ள அனைத்து கோர்ட்டு பிடிவாரண்டுகளையும் நிறைவேற்றுமாறு அனைத்து மாநகர போலீஸ் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி முதல் 48 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் 1,004 பிடிவாரண்டுகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×