search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Videos"

    மருத்துவர்கள் அல்லது செவிலியர்கள் துணையின்றி வீடியோ பார்த்து பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. #HomeBirth #HomeBirthVideos #TNHealthDepartment
    சென்னை:

    தமிழகத்தில் யுடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக சுகப்பிரசவம் தொடர்பான வலைத்தள விவாதங்கள், பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளன.



    இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், பழங்காலத்தில் வீட்டில் வைத்தே பெண்கள் எந்த பிரச்சினையும் இன்றி குழந்தைகளை பெற்றெடுத்ததாகவும், இந்த காலத்திலும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடியும் எனவும் பலர் இணையதளத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வீடியோ பார்த்தோ, திரைப்படங்களை பார்த்தோ பிரசவம் பார்க்கும் செயல் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எம்பிபிஎஸ் மருத்துவர்கள, பயிற்சி பெற்ற செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மட்டுமே பிரசவம் பார்க்க தகுதி பெற்றவர்கள்.

    பொதுமக்கள் அரசு மருத்துவமனையின் தாய் நல சேவைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தாய்சேய் நலனை காக்கும் கடமையை நிறைவேற்ற விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

    வீட்டில் பிரசவம் பார்ப்பது தெரியவந்தால் பொதுமக்கள் 102, 104 ஆகிய எண்கள் மூலம் பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம்.  044-24350496/24334811 மற்றும் 9444340496 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #HomeBirth #HomeBirthVideos #TNHealthDepartment
    ×