search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online pharmacy sales"

    ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிரான தனி நீதிபதி உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. #HighCourt #OnlineMedicineSale

    சென்னை:

    ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்வதை தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மருந்தாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா, ‘ஆன்லைன் மூலம் மருந்து, மாத்திரை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டார்.

    மேலும், ‘ஆன்லைன் மருந்து விற்பனையை ஒழுங்குப்படுத்தும் விதிமுறைகள் மத்திய அரசு வகுப்பதாக கூறுவதால், அவ்வாறு விதிமுறை உருவாக்கி, அரசிதழில் வெளியான பின்னர், உரிய உரிமத்தை ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் பெறவேண்டும். அதுவரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்யக்கூடாது’ என்று கடந்த 17-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

     


    இந்த உத்தரவை எதிர்த்து ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் விசாரித்தனர்.

    பின்னர், இடைக்கால மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்த நிலையில், இடைக்கால மனு மீதான தீர்ப்பை இன்று நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், ‘ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தனி நீதிபதி பிறப்பித்த தடை உத்தரவுக்கு, இடைக்கால தடை பிறப்பிக்கின்றோம். இந்த பிரதான வழக்கு விசாரணையை அடுத்த வாரத்தில் விசாரிக்கப்படும்’ என்று கூறியுள்ளனர். #HighCourt #OnlineMedicineSale

    ×