என் மலர்
நீங்கள் தேடியது "one not five minuttess"
- இயக்குனர் ராஜு துசா இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள திரைப்படம் 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்'.
- இப்படம் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.
இயக்குனர் ராஜு துசா எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்'. இப்படத்தை ருத்ரன்ஷ் செல்லுலாய்ட்ஸ் சார்பில் பொம்மக் சிவா தயாரித்துள்ளார். ஹன்சிகா நடிப்பில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் கால அளவு ஒரு மணி நேரம் மற்றும் நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆகும். இந்த நேரத்தை ஒரே ஷாட்டில் சுவாரசியமான முறையில் படமாக்கியிருக்கிறார்கள்.

ஒன்றல்ல ஐந்தே நிமிடம்
சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். கிஷோர் பாய்தாபு ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். 'ஒன்றல்ல ஐந்தே நிமிடம்' படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.