search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nuns protest"

    கேரளாவில் பாலியல் புகார் கூறப்பட்ட பி‌ஷப்பை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #nunsprotest

    திருவனந்தபுரம்:

    பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பி‌ஷப்பாக இருப்பவர் பிராங்கோ முள்ளக்கல். இவர் மீது கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் புகார் கூறி இருந்தார்.

    பி‌ஷப் பிராங்கோ முள்ளக்கல் கோட்டயத்திற்கு வந்திருந்தபோது அங்குள்ள கான்வென்ட் விருந்தினர் இல்லத்தில் வைத்து தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக குருவிலாங்காடு போலீஸ் நிலையத்திலும் அவர், புகார் செய்தார். பி‌ஷப் மீதான இந்த பாலியல் குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த புகார் பற்றி வைக்கம் போலீஸ் டி.எஸ்.பி. சுபாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் தனிப்படை போலீசார் ஜலந்தர் சென்று அந்த பி‌ஷப்பிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். இதனால் பி‌ஷப் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பும் நிலவியது.

    ஆனால் தனிப்படை போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் கேரளா திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில் பி‌ஷப் பிராங்கோ முள்ளக்கல்லை கைது செய்யக்கோரி கொச்சியில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியின் உறவினர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அந்த கன்னியாஸ்திரி பணியாற்றிய மடத்தைச் சேர்ந்த 5 கன்னியாஸ்திரிகள் கலந்து கொண்டதால் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. பி‌ஷப் பிராங்கோ முள்ளக்கல்லை கைது செய்ய வேண்டுமென்று எழுதப்பட்ட பதாகைகளையும் கன்னியாஸ்திரிகள் கைகளில் ஏந்தி கோ‌ஷ மிட்டனர்.

    போராட்டத்தில் பங்கேற்ற கன்னியாஸ்திரிகள் பேசுகையில், பாதிக்கப்பட்ட எங்கள் சகோதரிக்காக நாங்கள் தற்போது போராடி வருகிறோம். தேவாலயம், அரசு, போலீஸ் என்று யாரிடமிருந்தும் அந்த கன்னியாஸ்திரிக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே நாங்கள் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பி‌ஷப்புக்கு எதிராக பல ஆதாரங்கள் இருந்தபோதும் போலீசார் அவரை கைது செய்யவில்லை. இனி எங்களது ஒரே நம்பிக்கை நீதிமன்றம்தான் என்றனர்.

    இன்று 2-வது நாளாகவும் கன்னியாஸ்திரிகள் போராட்டம் நீடித்தது. பி‌ஷப்புக்கு எதிராக கன்னியாஸ்திரிகள் பொது இடத்தில் திரண்டு போராட்டத்தில் குதித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையில் பி‌ஷப் பிராங்கோ முள்ளக்கல்லை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரியின் உறவினர்கள் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.  #nunsprotest

    கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தரைச் சேர்ந்த பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.#FrancoMulakkal #NunsProtest
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ  மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

    அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பிஷப் ஃப்ராங்கோ  மூலக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



    இந்நிலையில், கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.

    அவர்கள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் போராட்டம் நடத்திய கன்னியாஸ்திரிகள், பிஷப் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்களின் சகோதரிக்காக இந்த போராட்டத்தை நடத்துகிறோம். அவருக்கு உரிய நீதி மறுக்கப்பட்டு வந்துள்ளது. அவருக்கு நீதி கிடைக்க நாங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளோம் என தெரிவித்தனர். #FrancoMulakkal #NunsProtest
    ×