search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nuh Riots"

    • ஜூலை 31-ந்தேதி நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீச்சு
    • மோதல் ஏற்பட்டு பின்னர் வன்முறையாக வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர்

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி விஷ்வ இந்து பரிசத் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் மோதல் வெடித்து, பின்னர் வன்முறையாக மாறியது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

    இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, வன்முறைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த வகையில் வன்முறை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. மம்மான் கான் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

    வன்முறை தொடர்பான எஃப்.ஐ.ஆர்.-ல் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    மம்மான் கான் பெரோஸ்புர் ஜிர்கா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்த தகவலை சீனியர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அப்டாப் அகமது உறுதி செய்துள்ளார்.

    • நூவில் ஏற்கனவே நடைபெற்ற வன்முறையில் 6 பேர் பலி
    • பள்ளிகள், வங்கிகள் மூடல், வாகனங்கள் கடும் சோதனைக்குப்பின் அனுமதி

    அரியானா மாநிலம் "நூ"-வில் இன்று இந்து அமைப்பினர் ஷோப யாத்திரை மேற்கொள்வதாக அறிவித்தனர். இதற்கு "நூ" நிர்வாகம் அனுமதி மறுத்த போதிலும் யாத்திரை நடைபெறும் என அறிவித்துள்ளது. இதற்கிடையே ஜி20 மாநாட்டின் ஷெர்பா குரூப் கூட்டம் "நூ"-வில் செப்டம்ர் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    பாதுகாப்பு பணியில் 1,900 அரியானா மாநில போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் 23 கம்பெனி துணை ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெளியாட்கள் "நூ" பகுதிக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்கள், வங்கிகள் மூடப்பட்டுள்ளன. செல்போன் இணையதளம், மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் நான்கு பேருக்கு மேல் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    குர்கானில் உள்ள சோனா சுங்கச்சாவடியில் வாகனங்கள் கடும் சோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாகனங்களும் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகிறது.

    இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் "நூ" பகுதியில் கடந்த ஜூலை 31-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத் நடத்தி ஊர்வலத்தின்போது, வன்முறை ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இதனால் ஊர்வலம் பாதிலேயே நிறுத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தை தொடர்வதாக கிராபசபை பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டு, இன்று ஊர்வலத்தை தொடர் முடிவு செய்யப்பட்டது.

    • நூ மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர்
    • பள்ளிகள் மூடப்பட்டு, இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன

    அரியானா மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கடந்த மாதம் 31-ந்தேதி பேரணி நடைபெற்றது. அப்போது சிலர் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். அதன்பின் மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இதில் ஆறுபேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக யாத்திரை பாதிலேயே நிறுத்தப்பட்டது.

    சுமார் இரண்டு மூன்று வாரங்களுக்குப்பின் நூ மாவட்டத்தில் முழுவதுமாக அமைதி திரும்பியது. இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத்தின் பிரிஜ் மண்டல ஜலாபிஷேக யாத்திரைக்கு அனுமதி கேட்டு நூ நிர்வாகத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக, நூ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நூ எஸ்.பி. நரேந்தர் பிஜார்னியா, அனுமதி கேட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

    இதுகுறித்து உள்ளூர் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் தேவேந்தர் சிங் கூறுகையில் ''எனக்கு இதுகுறித்து எந்த தகவலும் கிடைகக்வில்லை. அங்கே, யாத்திரைக்கு எந்தவிதமான அனுமதியும் தேவையில்லை'' என்றார்.

    நூ-வின் நல்ஹார் கோவிலில் இருந்து பிரோஜ்புர் ஜில்காருடைய ஜிர் மற்றும் ஷிங்கார் கோவில் வழியாக யாத்திரையை மீண்டும் தொடங்க கடந்த 13-ந்தேதி மகாபஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

    • நூ மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக வழக்குப்பதிவு
    • வெறுப்பு பேச்சு காரணமாக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன

    அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ந்தேதி விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் ஒரு பிரிவினர் தாக்குதல் நடத்தியதால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த கலவரம் அருகில் உள்ள மாநிலங்களிலும் பரவும் அபாயம் ஏற்பட்டது. ஆனால், போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.

    நூ மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக இணைய சேவை முடக்கப்பட்டது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து சேவை முடங்கியது. தற்போது அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டன.

    வன்முறைக்கு காரணமானவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    நூ மாவட்ட கலவரம் தொடர்பாக பஜ்ரங் தள தலைவர் ராஜ்குமார் என்ற பிட்டு பஜ்ரங்கி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொது ஊழியர்களை கடமை செய்வதில் இருந்து தடுப்பது மற்றும் தாக்குவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    சிறப்பு புலனாய்வு அமைப்பு அவரை தேடிவந்தனர். இந்த நிலையில், இன்று காலை பரிதாபாத்தில் உள்ள தபுவா என்ற இடத்தில் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து அப்போது வீட்டில் பதுங்கியிருந்த பிட்டு பஜ்ரங்கி தப்பித்து ஓட முயற்சி செய்தார்.

    அதிகாரிகள் அவரை துரத்திச் சென்று பிடித்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. சுமார் 20 அதிகாரிகளில் பலர் கையில் லத்தியுடன் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

    வெறுப்பு பேச்சு தொடர்பாக பஜ்ரங்கி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ''பிட்டு பஜ்ரங்கி தனது வீடியோவில் மத வெறியை தூண்டும் வகையில் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக தனது சக அமைப்புகளை தூண்டிவிட்டு வருகிறார்'' என ஒரு வழக்குப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • விஷ்வ இந்து பரிஷத் பேரணியில் கல்வீசப்பட்டதால் வன்முறை வெடித்தது
    • இரு தரப்பினர் இடையேயான மோதலில் 6 பேர் உயிரிழப்பு

    இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் மற்றொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மோதல் உருவானது. இந்த மோதல் வன்முறையாக வெடித்து, பெரும் கலவரமாக மாறியது.

    இந்த கலவரத்தில் இரண்டு ஊர்க்காவல்படை வீரர்கள், மசூதி மதகுரு உள்ளிட்ட ஆறுபேர் கொலை செய்யப்பட்டனர். வாகனங்கள், கடைகள் கும்பலால் தீவைத்து எரிக்கப்பட்டது. அசாதாரண சூழ்நிலை நிலவியதால் அரசு இணைய தள சேவையை முடக்கியது.

    சுமார் இரண்டு வார காலத்திற்குப்பிறகு தற்போது மீண்டும் இணைய தள சேவை அரியானாவின் நூ மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

    விஷ்வ இந்து பரிஷத் நடத்திய பேரணியில் பசு காவலர் மோனு மனேசர் கலந்து கொள்ள இருப்பதாக வதந்தி பரவியது. மோனு மனேசர், நூவில் நடைபெற இருக்கும் பேரணியில் ஆதரவாளர்கள் மிகப்பெரிய அளவில் திரள வேண்டும் என சமூக வலைத்தள வீடியோ மூலம் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், பேரணியில் கலந்து கொள்ள வேண்டாம். நீங்கள் கலந்து கொண்டால் தேவையற்ற பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்கள்.

    இந்த வன்முறையில் மானேசர் பங்கு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற இருக்கிறது.

    நூ மாவட்டத்தை நீக்க வேண்டும், இறைச்சிக்காக பசுக்கள் கொலை செய்யப்படாத மாவட்டமாக வேண்டும் என 51 பேர் கொண்ட கிராமசபை கூட்டம் வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே நூ மாவட்டத்தில் ஆகஸ்டு 28-ந்தேதி ஜலாஹிஷேக் யாத்திரை மீண்டும் தொடங்கும் என முடிவு செய்துள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு எதிராக கடும் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

    இந்த வன்முறை காரணமாக 390-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 118 பேர் வன்முறை தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகின்றனர். சமூக வலைத்தளம் மூலமாக வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டது தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள போலீசார்

    கடந்த வாரம் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டன. பேருந்து போக்குவரத்தும் முழு அளவில் இயக்கப்பட்டு வருகிறது.

    ×