என் மலர்
நீங்கள் தேடியது "nirmala seetha raman"
- நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும்.
- 44 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருள் அழிக்கப்பட்டுள்ளது.
மத்திய வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் 65-வது நிறுவன தினக் கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது:

வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றனர். மற்ற அமலாக்கத்துறை ஏஜென்சிகளுக்கு அவர்கள் உதாரணமாகத் திகழ்கின்றனர். இது பாராட்டுக்கு உரியது. இந்தியாவில் தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்படுவதை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன்.
75 ஆம் ஆண்டு சுதந்திர கொண்டாட்ட அமிர்தப் பெருவிழா காலத்தில், நாடு முழுவதும் 14 இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 44 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப் பட்டிருக்கிறது. இது வருவாய் புலனாய்வுத்துறை இயக்குனரகத்தின் வல்லமையை பறைசாற்றுகிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில், மூளையாக செயல்படுவோரையும், நிதியுதவி அளிப்பவர்களையும் கைது செய்ய வேண்டியது அவசியம். நவீன தொழில்நுட்பம், தர ஆய்வுகளை பயன்படுத்தி தங்கம் மற்றும் போதைப் பொருள் கடத்தலை முற்றிலும் தடுக்க வேண்டும். சமூக விரோத சக்திகள் தகவல்களைத் திருடுவதைத் தடுக்கவும், கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






