search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nicolas Kicker"

    அர்ஜெண்டினாவை சேர்ந்த டென்னிஸ் வீரரான நிகோலஸ் கிக்கர் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆறு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. #NicolasKicker #Argentinatennisplayer #matchfixing

    அர்ஜெண்டினாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் நிகோலஸ் கிக்கர். 25 வயதாகும் அவர் கடந்த 2015-ம் ஆண்டு இத்தாலி மற்றும் கொலம்பியாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் போட்டிகளில் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

    இதையடுத்து டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது. நிகோலஸ் இந்த விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. 



    இந்நிலையில், நிகோலஸ் மேட்ச் பிங்சிங்கில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதாக டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. இதையடுத்து அவர் ஆறு ஆண்டுகள் விளையாட டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு தடை விதித்துள்ளது. அதோடு 25 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

    அவருக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு தடை பாதியாக குறைக்கப்படுவதாகவும் டென்னிஸ் ஒருங்கிணைப்பு குழு பின்னர் அறிவித்தது. இதனால் அவர் வருகிற 2021-ம் ஆண்டு மே மாதம் மீண்டும் சர்வதேச போட்டிகளில் களமிறங்கலாம் என கூறப்பட்டுள்ளது. #NicolasKicker #Argentinatennisplayer #match
    அர்ஜென்டினா டென்னிஸ் வீரரான நிக்கோலஸ் கிக்கர் மீதான மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு நிரூபனம் ஆகியுள்ளது. இதனால் வாழ்நாள் தடைபெற இருக்கிறார்.
    அர்ஜென்டினாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நிக்கோலஸ் கிக்கர். 25 வயதான இவர், கடந்த 2015-ம் ஆண்டு இத்தாலியின் படோவாவில் நடைபெற்ற ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் தொடரின்போதும், அதேவருடம் செப்டம்பர் மாதம் கொலம்பியாவில் நடைபெற்ற தொடரில் பங்கேற்று விளையாடினார்.

    அப்போது மேட்ச் பிக்சில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து டென்னிஸ் நேர்மைக்கு குழு விசாரணை நடத்தி வந்தது. அப்போது அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கவில்லை. அத்துடன் டென்னிஸ் நேர்மைக் குழுவின் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை. இதனால் நிக்கோலஸ் கிக்கர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.



    ‘‘அவர் அனைத்து குற்றச்சாட்டிலும் குற்றவாளி என தெரியவந்துள்ளது. தனிப்பட்ட ஊழல் தடுப்பு விசாரணை அதிகாரி ஜேன் மல்காஹி தண்டனை விவரத்தை பின்னர் அறிவிப்பார். அவர் என்ன தண்டனை அறிவிக்கிறார் என்பது எங்களுக்கு கிடைத்த உடன் தெரிவிக்கப்படும்’’ என்று டென்னிஸ் நேர்மைக்குழு தெரிவித்துள்ளது.
    ×