search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "National Table Tennis"

    • நாளை மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது.
    • தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில் மாநிலங்கள் இடையேயான தேசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடத்தப்படுகிறது.

    இந்தப் போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (8-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 16-ந்தேதி வரை இந்தப் போட்டி நடக்கிறது.

    17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பிரிவில் போட்டி நடகிறது. இதில் 30 மாநிலங்கள், நிறுவனங்களை சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    அணிகள் பிரிவு, தனி நபர், இரட்டை பிரிவில் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து அணிகள் பிரிவில் 16 பேரும், சிறுவர் பிரிவில் 15 பேர், சிறுமியர் பிரில் 15 பேர் கலந்து கொள்கிறார்கள்.

    இந்தப் போட்டிகளின் மொத்த பரிசு தொகை ரூ.6.6 லட்சமாகும். 19 வயதுக்குட்பட் பிரிவில் சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு தலா ரூ.72 ஆயிரம், 17-வயது பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு தலா ரூ. 60 ஆயிரம் வழங்கப்படும்.

    நாளை மாலை 5 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை தொடங்கி வைக்கிறார்.

    15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. கடைசியாக 2007-ம் ஆண்டு தேசிய சப்-ஜூனியர் போட்டி நடந்தது.

    மேற்கண்ட தகவலை தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க தலைவர் டி.தேவ நாதன்யாதவ் செயலாளர் ஏ.வி.வித்யாசாகர் ஆகியோர் தெரிவித்தனர்.

    ×