என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Name board on streets"

    • பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
    • 12 வார்டுகளில் அமைக்கப்படுகிறது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி மன்ற கூட்ட அரங்கில் மன்ற கூட்டம் நடந்தது. பேரூராட்சி மன்ற தலைவர் வேணி ஏழுமலை, தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் மகேந்திரன், அனைவரையும் வரவேற்றார்.

    கூட்டத்தில் பெரணமல்லூர் பேரூராட்சியில் 12 வார்டுகளில் உள்ள அனைத்து தெருகளிலும் பெயர் பலகை வைக்க வேண்டும், பஸ் நிலையம், மாடவீதி கழிப்பிடம், கிராம நிர்வாக அலுவலர் அருகே உள்ள பேரூராட்சி சொந்தமான கழிப்பிடங்களில் உள்ள கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்து பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.

    மேலும் தெருவிளக்கு, குடிநீர், ஆகியவை குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் சிவராமன், பூங்காவனம், சிவகாமி, மோனிஷா, பானு, உள்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ×