என் மலர்
நீங்கள் தேடியது "namakkal 4 arrest"
நாமக்கல்லில் பொது சொத்துகளை சேதப்படுத்த திட்டமிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:
நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுத்தேவன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சேந்தமங்கலம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்காயி அம்மன் கோவில் போகும் வழியில் சந்தேகத்திற்கு இடமாக அமர்ந்து இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் பொம்மம்பட்டி அல்லாளபுரத்தை சேர்ந்த தமிழரசன் (வயது 22), பூபதிராஜன் (22), எம்.மேட்டுப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த சந்தோஷ்குமார் (22) மற்றும் பிரதீபன் (30) என்பது தெரியவந்தது.
அவர்கள் அரசு மதுபான கடையை சேதப்படுத்தவும், அரசு பஸ் கண்ணாடியை உடைக்க திட்டம் போட்டு இருப்பதும், மேலும் ரவுடிசம் செய்து, பணம் சம்பாதிக்க திட்டம் போட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் பொது சொத்துக்களை சேதப்படுத்த திட்டமிட்டதாக போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.