search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motor Cycle Collide"

    நோணாங்குப்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலியானார். இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    புதுவை நைனார் மண்டபம் நாகம்மாள் நகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் அசோகன் (வயது 57). ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று அசோகன் ஆட்டோ சவாரிக்கு நோணாங்குப்பம் பேரடைஸ் ஹவுசுக்கு சென்றார். அங்கு ஆட்டோவை புதுவை- கடலூர் சாலையின் இடது புறத்தில் நிறுத்தி விட்டு எதிரே உள்ள கடைக்கு டீ சாப்பிட சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் அசோகன் மீது மோதி சிறிது தூரம் இழுத்து சென்றது. மோட்டார் சைக்கிள் நிற்காமல் சென்று விட்டது.

    இதில் படுகாயம் அடைந்த அசோகனை அருகில் நின்றவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அசோகன் இறந்து போனார்.

    இதுகுறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், ஏட்டு புவனேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×