என் மலர்
நீங்கள் தேடியது "Morgan Freeman"
ஹார்வி வெயின்ஸ்டீனை தொடர்ந்து ஹாலிவுட்டில் பிரபல நடிகராக இருக்கும் மார்கன் ப்ரீமேன் மீது 16 பெண்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். #MorganFreeman
80 நடிகைகளை பாலியல் பலாத்காரம் செய்த சர்ச்சையில் சிக்கிய தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீனை தொடர்ந்து ஹாலிவுட்டில் இன்னொரு செக்ஸ் புகார் கிளம்பி உள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் மார்கன் ப்ரீமேன் மீது 16 பெண்கள் பாலியல் புகார் கூறி திரையுலகை அதிர வைத்துள்ளனர்.
80 வயதாகும் மார்கன் ப்ரீமேன் 50 வருடங்களாக சினிமாவில் நடிக்கிறார். தி ஷஷாங்க் ரிடம்ப்ஷன், இன்விக்டஸ், தி பக்கெட் லிஸ்ட் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். ‘கோயிங் இன் ஸ்டைல்’ படத்தில் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றியபோது மார்கன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் என் உடம்பில் தொடக்கூடாத இடங்களில் தொட்டும் ஆபாச வார்த்தைகள் பேசியும் மார்கன் எனக்கு செக்ஸ் தொல்லைகள் கொடுத்தார் என்று படக்குழுவை சேர்ந்த இன்னொரு பெண் குற்றம் சாட்டியுள்ளார். ‘நவ் யூ சீ மீ’ படக்குழுவை சேர்ந்த ஒரு பெண் கூறும்போது, மார்கன் ப்ரீமேன் முன்னால் இறுக்கமான உடைகள் அணிந்து பெண்கள் சென்றால் பின் பக்கத்தில் தட்டி சில்மிஷம் செய்வார். இதனால் அவர் பக்கத்தில் செல்லவே பெண்கள் பயப்படுவார்கள் என்றார்.

இதுபோல் 16 பெண்கள் பாலியல் புகார் கூறியுள்ளனர். அந்த பெண்களிடம் மார்கன் ப்ரீமேன் மன்னிப்பு கேட்டுள்ளார். “நான் யாரையும் தொந்தரவு செய்வது இல்லை. என்னால் அசவுகரியத்துக்கு உள்ளான பெண்களிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.






