search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money exchange company employees"

    சென்னை தேனாம்பேட்டையில் செல்போன் வியாபாரியிடம் மிளகாய் பொடி தூவி அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்த வழக்கில் பணிபரிமாற்ற நிறுவன ஊழியர்கள் 7 பேர் போலீசில் சிக்கியுள்ளனர்.
    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் செல்போன் வியாபாரியான ஜாபர் சாதிக். அவரது நண்பர் தமிம்அன்சாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் மிளகாய் பொடியை தூவி அமெரிக்க டாலர்களை கொள்ளையடித்தது. ரூ.4 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளை போனதாக கூறப்பட்டது.

    இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுபற்றி ஜாபர்சாதிக், தமிம்அன்சாரி இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தமிம்அன்சாரி நண்பர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணத்துடன் செல்வது பற்றி தனது நண்பர்களான வியாசர்பாடியை சேர்ந்த விக்கி, கார்த்திக், அருண், மனோகரன் ஆகியோரிடம் தமிம்அன்சாரி செல்போனில் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தமிம்அன்சாரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் தி.நகரில் உள்ள பணபரிமாற்ற நிறுவனத்தை சேர்ந்த 7 பேரும் இப்போது பிடிபட்டுள்ளனர். அந்த நிறுவனத்தின் மேலாளர் சபீஅகமது, ஊழியர்கள் செல்வகுமார், வெங்கடேஷ், பத்மநாபன், அசோக்குமார், அபுபக்கர் சித்திக், முகமது முத்தாகிர் ஆகிய 7 பேர் சிக்கினர்.

    ரூ.10 லட்சம் பணத்தை முறையற்ற வகையில் ஆவணங்கள் இன்றி அமெரிக்க டாலர்களாக இவர்கள் மாற்றிக் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
    ×