என் மலர்
நீங்கள் தேடியது "MiG 27 Aircraft Crashed In Jodhpur"
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படையின் மிக் ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், பைலட் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். #MiG27Aircraft
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்திய விமானப்படை வீரர்கள் இன்று காலை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டனர். மிக் 27 ரக விமானத்தில் பறந்தபடி குறிப்பிட்ட இலக்கிற்கு சென்று திரும்பினர்.
அவ்வகையில், ஒரு பைலட் ஓட்டிச் சென்ற விமானத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவசரமாக தரையிறக்க முயற்சித்துள்ளார். ஆனால் விமானம் அதற்குள் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. ஆனால், விமானம் தரையில் விழுவதற்கு முன்னதாக, பைலட் வெளியே குதித்து உயிர்தப்பியுள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மிகவும் பழமையான மிக் 27 ரக போர் விமானங்கள் பயிற்சியின்போது அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. கடந்த ஜூன் மாதம் குடியிருப்பில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கியது. கடந்த நவம்பர் மாதம் ஒரு விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. #MiG27Aircraft