search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mi Power Bank 2i"

    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்த 10000 எம்.ஏ.ஹெச். மற்றும் 20000 எம்.ஏ.ஹெச். பவர் பேங்க் விலை இந்தியாவில் நிரந்தரமாக குறைக்கப்பட்டுள்ளது. #Xiaomi #GST


    சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பரில் 10,000 எம்.ஏ.ஹெச். மற்றும் 20,000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு பவர் பேங்க்-களின் விலை ரூ.100 வரை அதிகரிக்கப்பட்டது. 

    இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. வரிமுறையில் மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து Mi பவர் பேங்க் விலையை குறைப்பதாக சியோமி அறிவித்துள்ளது. தற்போதைய விலை குறைப்புக்கு பின் Mi பவர் பேங்க் விலை 10,000 எம்.ஏ.ஹெச். மாடலுக்கு ரூ.799, 20,000 எம்.ஏ.ஹெச். பவர் பேங்க் 2i விலை ரூ.1,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சியோமி அறிமுகம் செய்த போதே பவர் பேங்களின் விலை இதே தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பவர் பேங்க்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளுக்கான ஜி.எஸ்.டி. 28% இல் இருந்து 18% ஆக குறைக்கப்பட்டதை தொடர்ந்து விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய Mi பவர் பேங்க் 2i பெயரை தவிர வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள் பழைய மாடல்களை போன்றே வழங்கப்பட்டுள்ளது. எனினும் இதன் அளவுகளில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பவர் பேங்களிலும் இருவித ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் லோ-பவர் மோட் வழங்கப்பட்டிருக்கிறது. பயனர்கள் இதனை ஆக்டிவேட் செய்ய பவர் பட்டனை இருமுறை அழுத்தினால் போதுமானது.

    பவர் பேங்க் கொண்டு Mi பேன்ட் மற்றும் Mi ப்ளூடூத் ஹெட்செட்களை சார்ஜ் செய்ய முடியும். 10000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i மாடலில் மெட்டல் வடிவமைப்பும், 20000 எம்.ஏ.ஹெச். Mi பவர் பேங்க் 2i மாடலில் ABS ரக பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பவர் பேங்க் கைகளை விட்டு நழுவாமல் இருக்கும். #Xiaomi #GST
    ×