என் மலர்
முகப்பு » mexico balloon festival
நீங்கள் தேடியது "mexico balloon festival"
அமெரிக்காவின் அண்டைநாடான மெக்சிகோவில் 47-வது பலூன் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. #MexicoBalloonFestival #BalloonFestival
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோ நாட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் பலூன் திருவிழாக்கள் சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தியான பறக்கும் கியாஸ் பலூன் போட்டியாகும். இந்த போட்டிகளை காண பல வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் மெக்சிகோவுக்கு வருகின்றனர்.
அவ்வகையில், தொடர்ந்து 47-வது ஆண்டாக இந்த பலூன் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. கண்ணைக்கவரும் வகையில் சுமார் 500 பலூன்கள் வானத்தில் வட்டமடித்து பறக்கும் இந்த திருவிழாவில் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சில முதியவர்களும் போட்டியாளர்களாக பங்கேற்று வருகின்றனர்.

ஒருமாதம் நடைபெறும் இந்த திருவிழாவின் முடிவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் உண்டு. #MexicoBalloonFestival #BalloonFestival
×
X