search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Menstrual Cup"

    • அதிக உதிரபோக்கு என்றாலும் மென்சுரல் கப் அசெளகரியம் அளிக்காது.
    • மருத்துவரை அணுகி மென்சுரல் கப் பயன்படுத்துவது நல்லது.

    மென்சுரல் கப் மலிவு விலையில் கிடைக்கிறது. இதன் விலை அதிகம் என்றாலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை கணக்கிடும் போது அது மலிவானது தான். இது டாம்பன்கள் (Tampons) பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது.

    * நாப்கின் மற்றும் டாம்பன்களை விட மென்சுரல் கப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு சிறந்தது.

    * அதிக உதிரபோக்கு என்றாலும் மென்சுரல் கப் அசெளகரியம் அளிக்காது.

    * இதை கருத்தடை சாதனம் ஐயூடி உடன் அணியலாம்.

    * மென்சுரல் கப் பெரும்பாலான பெண்களின் விருப்பமாக உள்ளது. இது டேம்பன் போல் அல்லாமல் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை.

    * ஒரு முறை விலை கொடுத்து வாங்கினால் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.

    * மென்சுரல் கப் பாதுகாப்பானவை. இது ரத்தத்தை உறிஞ்சுகொள்ளாமல் சேகரிக்கிறது. இதனால் ரத்தம் உறிஞ்சும் டேம்பன், நாப்கின் போன்று தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.

    * தொற்று அபாயம் இல்லை. இந்த மென்சுரல் கப்பானது ஒன்று முதல் இரண்டு அவுன்ஸ் வரை உதிரத்தை வைத்திருக்கும்.

    * டேம்பன் பயன்பாடு ஒரு அவுன்சிலும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வைத்திருக்க முடியும். இது சுற்றுப்புற சூழலுக்கு உகந்தவை அல்ல.

     தீமைகள்

    * மென்சுரல் கப் பயன்பாடு குழப்பமானதாக இருக்கலாம். செருகுவது அல்லது அகற்றுவது சிலருக்கு கடினமாக இருக்கும். சரியான பொருத்தத்தை கண்டறிவது சிரமமாக இருக்கலாம்.

    * சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினை உண்டாகலாம். பிறப்புறுப்பு எரிச்சல் ஏற்படலாம்.

    * சில நேரங்களில் மென்சுரல் கப் அகற்றும் போது கசிவு உண்டாகலாம். செயல்முறையின் போது கசிவுகளை தவிர்க்க முடியாது. இதை செருகுவதற்கு அல்லது அகற்றுவதற்கு கடினமாக இருக்கும். காரணம் நீங்கள் சரியான அளவை அணிந்திருக்க மாட்டீர்கள்.

    * மென்சுரல் கப் சரியான மடிப்பை பெறாத நிலையை சில நேரங்களில் உணரலாம். கப்பை வெளியே இழுப்பது சிரமமாக இருக்கலாம்.

    * மென்சுரல் கப் எல்லாமே ஒரே அளவு கிடையாது. உங்கள் யோனிக்கும் பொருத்தமான ஒன்றை கண்டுப்பிடிப்பதற்கு முன்பு நீங்கள் சரியான பிராண்டுகளை முயற்சிக்க வேண்டியிருக்கும்.

    * பெரும்பாலான மென்சுரல் கப் லேடெக்ஸ் இல்லாத பொருள்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இது லேடெக்ஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் சிலருக்கு சிலிக்கான் அல்லது ரப்பர் பொருள் ஒவ்வாமையை உண்டாக்கும் வாய்ப்பு உள்ளது. இது யோனி பகுதியில் எரிச்சலையும் அரிப்பையும் மற்றும் பெண் உறுப்பில் பிரச்சனைகள் கூட உண்டு செய்யலாம்.

    * மென்சுரல் கப் சரியாக சுத்தம் செய்து பராமரிக்கப்படாவிட்டால் யோனி எரிச்சல் அரிப்பு உண்டாகும். லூப்ரிகேஷன் இல்லாமல் கப் உள்ளே வைத்தால் அது அசெளகரியத்தை உண்டு செய்யலாம்.

    * மென்சுரல் கப் சரியாக சுத்தம் செய்யாத நிலையில் அது அந்தரங்க உறுப்பில் அதிக தொற்றை உண்டு செய்யலாம். அதனால் முறையாக மருத்துவரை அணுகி மென்சுரல் கப் பயன்படுத்துவது நல்லது.

    • உதிரபோக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
    • மென்சுரல் கப்பானது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை.

    ஒவ்வொரு பெண்களும் பூப்படைந்த காலம் முதல் மெனோபாஸ் காலம் வரை மாதவிடாய் சுழற்சியை எதிர்கொள்கிறார்கள். உதிரபோக்கு ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். இந்த நேரத்தில் அவர்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    முன்னோர்கள் காலத்தில் துணிகளை பயன்படுத்தி வந்தவர்கள் பிறகு நாப்கினுக்கு மாறினார்கள். தற்போது பெருமளவு நாப்கின் பயன்பாடு இருந்தாலும் அதை தொடர்ந்து டேம்பன், மென்சுரல் கப் பயன்படுத்துவதும் உண்டு. இந்த மென்சுரல் கப் பயன்பாடு குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.

    மென்சுரல் கப் சிறிய நெகிழ்வான கோப்பை சிலிகான் அல்லது லேடெக்ஸ் ரப்பரால் ஆனது. இது பார்க்க புனல் வடிவத்தில் இருக்கும். இது மாதவிடாய் திரவத்தை பிடிக்கவும் சேகரிக்கவும் பயன்படும். நாப்கின் போன்று ரத்தத்தை உறிஞ்சாமல் சேகரித்து வைக்கும்.

    மென்சுரல் கப் பயன்படுத்தும் போது அதிக உதிரபோக்கையும் அது சேமிக்க கூடும். இதனால் நாப்கின், டேம்பன் போன்று இல்லாமல் இது சுற்றுசூழல் நட்பு பொருளாகவும் செயல்படுகிறது. உதிரபோக்கு அளவை பொறுத்து நீங்கள் 12 மணி நேரம் வரை கூட இந்த கப் வைத்திருக்கலாம். மென்சுரல் கப் பல வகைகளில் கிடைக்கிறது.

     முதல் முறையாக மென்சுரல் கப் பயன்படுத்தினால் அது சங்கடமாக இருக்கும். அதனால் கப்பின் விளிம்பில் சுத்தமான எண்ணெய் அல்லது லூப்ரிகண்ட் பயன்படுத்தி உயவூட்டவும். ஈரமான மாதவிடாய் கோப்பை செருகுவதற்கு எளிதானது.

    சுத்தம் செய்யும் முறை

    மாதவிடாய் சுழற்சி காலத்தில் மென்சுரல் கப்பானது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை. ஒவ்வொரு முறையும் மாதவிடாய் சுழற்சி முடிவடைந்த பிறகு, மென்சுரல் கப் எடுத்து சுத்தமான வெந்நீரில் கொதிக்க வைத்து நன்றாக வெயிலில் உலர்த்தி அதற்குரிய உறையில் பத்திரப்படுத்தி வைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது மாற்ற வேண்டும்.

    இவை நீடித்து பயன்படுத்தக்கூடியவை. 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை இவை நீடிக்கும். எனினும் நீங்கள் வாங்கும் மென்சுரல் கப் வகைகள் பொறுத்து இவை மாறுபடலாம். பயன்பாட்டுக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு இதை பயன்படுத்த வேண்டாம்.

    • நாப்கின் உபயோகிக்க வேண்டியிருக்காது.
    • பெண்கள் வழக்கமாக உபயோகிக்கும் உள்ளாடை போன்றதுதான்.

    பீரியட்ஸ் பேன்ட்டீஸ் உபயோகிக்கலாமா என்று தெரிந்து கொள்வதற்கு முன், அதன் உபயோகம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். பீரியட்ஸ் பேன்ட்டீஸ் என்பவை பெண்கள் வழக்கமாக உபயோகிக்கும் உள்ளாடை போன்றதுதான்.

    நாப்கின் எப்படி பீரியட்ஸ் நாள்களின் ரத்தப்போக்கை உறிஞ்சிக் கொள்ளுமோ, அதேபோல் உறிஞ்சிக்கொள்ளும். இதில் பாலியூரிதின் லேமினேட்... எனப்படும் ஃபேப்ரிக் இருக்கும். இது ப்ளீடிங்கை உறிஞ்சிக்கொள்ளும். இதை உபயோகிக்கும்போது நாப்கின் உபயோகிக்க வேண்டியிருக்காது. ஆனால், அதேசமயம் இதை நாள் முழுவதும் உபயோகிக்க முடியாது.

    8 முதல் 10 மணிநேரத்துக்கொரு முறை இந்த பேன்ட்டீஸை மாற்ற வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு உபயோகிக்கும் டயாப்பரில் உள்ளது போல இதில் லீக் ப்ரூஃப் கவரிங் இருப்பதால், ப்ளீடிங் வெளியே கசியாது. இதனால் சமீப காலமாக நிறைய பெண்கள் இதை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    அதேசமயம் பீரியட் பேன்ட்டீஸ் உபயோகிப்பதில் நடைமுறை சிக்கல்களும் உள்ளன. இது சற்று காஸ்ட்லியானது. இதை துவைத்துப் பயன்படுத்துவதும் சிரமம். நிறைய லேயர்கள் கொண்ட இந்த பேன்ட்டீசை துவைத்து காயவைக்கும்போது, அதற்கு நீண்டநேரம் எடுக்கும்.

    எனவே, ஒரு பீரியட்சுக்கு உங்களுக்கு நான்கைந்து பேன்ட்டீஸ் தேவைப்படலாம். பணியிடங்களிலும் வெளியிடங்களிலும் இதை மாற்றுவதும் சிரமமாக இருக்கும். அதிக ப்ளீடிங் உள்ளவர்கள் இதை பயன்படுத்துவது சரியாக இருக்காது. நீண்ட நேரம் இதைப் பயன்படுத்துவதால் ப்ளீடிங் வாடை வீசலாம்.

    கெமிக்கல் சேர்த்து செய்யப்பட்ட மற்றும் வாசனை சேர்த்து செய்யப்பட்ட நாப்கின், பேன்ட்டீஸ் எதுவுமே உபயோகிக்க ஏற்றவை அல்ல. ஏனெனில், அது வெஜைனா பகுதியில் உள்ள நல்ல பாக்டீரியாவை அழித்துவிடும்.

    சிலவகை பீரியட் பேன்ட்டீசில் அதிக அளவிலான பெர் அண்ட் பாலிஃப்ளுரோ ஆல்கைல் சப்ஸ்டன்ஸ் இருப்பதாக சொல்கிறார்கள். இது அந்த பேன்ட்டீஸின் உள் மற்றும் வெளி லேயர்களில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதை 'ஃபார்எவர் கெமிக்கல்' என்று சொல்கிறார்கள். இது அந்த பேன்ட்டீசை எண்ணெய், தண்ணீர், வெப்பம் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதாக சொல்கிறார்கள்.

    இந்த பொருளானது சூழலுக்கு உகந்ததல்ல, அதிக நாள்கள் உபயோகிப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம், கல்லீரல் பாதிக்கப்படலாம், கருத்தரிப்பதில் சிக்கல் வரலாம், சிலவகை புற்றுநோய் பாதிக்கலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. எனவே பீரியட்சுக்கான பிரத்தியேக உள்ளாடை வாங்கும்போது PFAS ஃப்ரீ என குறிப்பிடப்பட்டிருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.

    அவற்றில் இப்படிப்பட்ட கெமிக்கல்கள் வராது. நாப்கினோ, டாம்பூனோ, மென்ஸ்டுரல் கப்போ எது உபயோகித்தாலும் மாதவிடாய்கால சுகாதாரம் மிக முக்கியம்.

    பிறப்புறுப்பு பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சாதாரண தண்ணீரால் கழுவினால் போதுமானது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வாசனை உள்ள பொருள்களை உபயோகிக்கக் கூடாது. பேன்ட்டி லைனர் என்பது லேசான ப்ளீடிங், வெள்ளைப்படுதல் போன்றவற்றுக்கு உபயோகிப்பது, அது பீரியட்ஸ் நாட்களில் உபயோகிக்க ஏற்றதல்ல.

    ×