என் மலர்
நீங்கள் தேடியது "Melba Mebane"
- 90 வயதை கடந்த மெல்பா கடந்த 30-ந்தேதி பணி நிறைவு பெற்றார்.
- மெல்பா தான் வேலை செய்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்ததாக தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க நாட்டின் டெக்சாசை சேர்ந்தவர் மெல்பா மெபேன் (வயது 90). மெல்பா 16 வயதாக இருந்தபோது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
அந்த நிறுவனத்தின் ஷாப்பிங் மாலில் லிப்ட் ஆபரேட்டர் பணிக்கு சென்றார். அதே நிறுவனத்தில் ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் 74 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்தார்.
இந்த நிலையில் 90 வயதை கடந்த மெல்பா கடந்த 30-ந்தேதி பணி நிறைவு பெற்றார். நான் வீட்டில் இருந்ததை விட எனது நிறுவனத்தில் தான் அதிக நேரம் செலவழித்தேன். தற்போது வீட்டில் தனியாக இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது என்றார்.
மெல்பா தான் வேலை செய்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்ததாக தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.






