என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meghan Harry"

    பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி கருவுற்றிருப்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ள சூசெக்ஸ் அரண்மனை வரும் வசந்தகாலத்தில் புது வரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. #MeghanandHarry #Meghanpregnant
    லண்டன்:

    இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியின் இளையமகன் ஹாரி (33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (36) கடந்த மே மாதம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது.



    இந்த தம்பதியர் சூசெக்ஸ் அரண்மனையின் அரசகுமாரராகவும், அரசகுமாரியாகவும் அறியப்படுகின்றனர்.

    இந்நிலையில், தற்போது மேகன் மார்கல் கருவுற்றிருப்பதை சூசெக்ஸ் அரண்மனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அடுத்த (2019) ஆண்டின் வசந்தகாலத்தில் (மார்ச் முதல் மே மாதம் வரை) தங்கள் அரண்மனையின் குட்டி அரசகுமாரனை எதிர்ப்பார்ப்பதாக சூசெக்ஸ் அரண்மனை வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹாரி - மேகன் மார்கல் தம்பதியர் தற்போது ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த பயணத்துக்கு பின்னர் அவர்கள் பிஜி தீவுக்கும் செல்கின்றனர். #MeghanandHarry  #Meghanpregnant 
    ×