search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medication"

    எண்ணமும் செயலும் மாறுபட்டு செயல்படும் மனக் கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயை குணப்படுத்தும் நவீன மருந்தை ரஷிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். #Russianscientists #scientistsdevelop #schizophreniamedication
    மாஸ்கோ:

    மனதளவில் நினைத்ததை செயல்பட இயலாத மனக்கோளாறுகளில் ஒன்றான மனச்சிதைவு நோயினால் உலகம் முழுவதும் சுமார் 2 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோயை முற்றிலுமாக குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்நிலையில், ரஷியாவில் உள்ள பாவ்லோன் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பெல்ட்மேன் ஆய்வு கூடத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த முயற்சியில் இப்போது வெற்றி பெற்றுள்ளனர்.

    மாதிரிப்படம்

    TAAR1 என தற்போது குறியீட்டு பெயர் மட்டும் சூட்டப்பட்டுள்ள இந்த புதிய மருந்தை ஆய்வு கூடத்தில் உள்ள எலிகளின் நரம்பு மண்டலத்தில் ஊசி மூலம் செலுத்தி பரிசோதித்தனர். இதில் எதிர்வினையாக எலிகளின் மூளைப்பகுதியில் உள்ள நரம்பியல் பகுதியில் சில மாற்றங்கள் நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

    இந்த மருந்தை மாத்திரை வடிவில் தயாரித்து வெளியிடுவதன் மூலம் மனச்சிதைவு, வெறிநோய் உள்ளிட்டவற்றை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக இந்த ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஏலியா சுக்னோவ் குறிப்பிட்டுள்ளார். #Russianscientists #scientistsdevelop #schizophreniamedication
    ×