search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Matriculation School teachers"

    ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர்களுக்கு அறிவியில் தொழில் நுட்ப புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஜெயங்கொண்டம்:

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் விதமாக 26-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தயார்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்க பயிற்சி ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சிக்கு பள்ளி தாளாளர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் விஜயலட்சுமி பயிற்சியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் தனலெட்சுமி, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பழனியப்பன், பொருளாளர் சக்திவேல், லயன் சங்கத்தலைவர் ரவிச்சந்திரன், செயலர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி, கலியபெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பயிற்சியில் மரபு சார் தொழில்நுட்பம் சமூக பண்பாடு மற்றும் வாழ்வாதாரம், செல்வம், ஆரோக்கியம், சுகாதாரம், துப்புரவு, சூழல் மண்டலமும் செயல்பாடும் உள்ளிட்ட தலைப்புகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்களை இளம் விஞ்ஞானிகளாக உருவாக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் முத்துக்குமார், பிரபாகரன், முத்துக்கண்ணன், நாராயணசாமி, சதாசிவம், தர்மராஜன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் அரியலூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மராஜன் வரவேற்றார். இறுதியில் செயற்குழு உறுப்பினர் ஞான சேகரன் நன்றி கூறினார். #Tamilnews

    ×