search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mandapam Fishermen"

    • மண்டபம் கடலில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
    • மீன்பிடி தடையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர்.

    மண்டபம்:

    இலங்கையையொட்டி உள்ள வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஆழ்கடல் பகுதியில் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு காணப்படும். குறிப்பாக பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இதையடுத்து மண்டபம் பகுதி மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் மீன்பிடி அனுமதி டோக்கனும் வழங்கப்படவில்லை. இதனால் மண்டபம் கடலில் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    இந்த நிலையில் இன்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 2-வது நாளாக மண்டபம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீன்பிடி தடையால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். நாட்டுப்படகு மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ×