search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malay Recipes"

    • உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • பலவிதமான சிக்கன் சைடிஷ்களை செய்திருப்போம்.

    சிக்கனை வைத்து செய்யப்படும் அனைத்து உணவுகளும் பொதுவாக உணவு பிரியர்களுக்கு மட்டுமின்றி பலருக்கும் மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். பொதுவாக நாம் பலவிதமான சிக்கன் சைடிஷ்களை சப்பாத்தி, நான், புல்கா, மற்றும் பரோட்டாவிற்கு செய்து சுவைத்து இருப்போம். ஆனால் நாம் இன்று இங்கு காண இருப்பது சிக்கன் மலாய் கறி.

    தேவையான பொருட்கள்:

    தயிர்- 1 கப்

    பெரிய வெங்காயம்- 2

    பச்சை மிளகாய்- 2 to 3

    பூண்டு- 6 பல்

    இஞ்சி- 2 துண்டு

    மஞ்சள் தூள்- ¼ மேஜைக்கரண்டி

    மல்லி தூள்- 2 மேஜைக்கரண்டி

    கரம் மசாலா- 1 மேஜைக்கரண்டி

    க்ரீம்- 2 மேஜைக்கரண்டி

    முந்திரி- 8 to 10

    உப்பு- தேவையான அளவு

    எண்ணெய்- தேவையான அளவு

    கொத்தமல்லி- சிறிதளவு

    கருவேப்பிலை- சிறிதளவு

    செய்முறை:

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து மிதமான அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு பொன் நிறம் ஆகும் வரை அதை வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறம் ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விட வேண்டும்.

    இப்பொழுது முந்திரி பருப்புகளை எடுத்து அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு பேஸ்ட் ஆக்கி எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டும்.

    பின்னர் நாம் நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை எடுத்து ஒரு பவுலில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின்னர் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் முந்திரி பேஸ்ட்,  நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் வரை அதை ஊற விடவும்.

    ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை பக்குவமாக கொட்டி அதை நன்கு கிளறி விட்டு  வேக விட வேண்டும்.

    இப்பொழுது நாம் வதக்கி ஆற வைத்திருக்கும் வெங்காயத்தை எடுத்து அதை நன்கு கைகளின் மூலம் நசுக்கி வைத்து கொள்ளவும். அதன்பிறகு அதில் நாம் நசுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் வேக விடவும். (மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வேக விடவும்.)

    பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு அடுப்பை குறைத்து விட்டு அதை சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை வேக விட வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை ஒரு கிளறு கிளறி பின்பு அதில் ஃபிரஷ் க்ரீம்- ஐ சேர்த்து நன்கு கிளறி விட்டு சுமார் 3 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி விடவும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் மலாய் கறியை அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஒரு தட்டில் வைத்து அதை சப்பாத்தி அல்லது நான் உடன் சுடச் சுடபரிமாறவும்.

    இப்பொழுது சூடான மற்றும் மிகவும் சுவையான சிக்கன் மலாய் கறி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.


    ×