என் மலர்
நீங்கள் தேடியது "Madurai Demonstration"
மதுரை:
டைரக்டர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஓ.டி.டியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்துக்கு பா.ம.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜெய்பீம் படத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழக பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பினர் 50-க்கும் மேற்பட்டோர் பாம்புகள், எலிகள் மற்றும் தோல்பாவைக்கூத்து, பூம்பூம் மாடு உள்ளிட்டவைகளுடன் மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று பேரணியாக திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கூட்டமைப்பின் தலைவர் மகேஸ்வரி கூறுகைகில், ஜெய்பீம் படத்தில் எங்களுடைய சமுதாயம் சந்திக்கும் இன்னல்களை சூர்யா காட்டியுள்ளார். சூர்யாவுக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது பாம்பை கொண்டு எறிவோம் என்றார்.






