search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Cannabis"

    மதுரையில் போலீசார் கண்டுகொள்ளாததால் கஞ்சா கடத்தும் கும்பல் இளைய சமுதாயத்தினரை குறிவைத்து அதனை விற்பனை செய்து வருகிறது.
    மதுரை:

    கேரள மாநிலம் குமுளி வழியாக தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வழியாக தென் மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தும் கும்பல் இளைய சமுதாயத்தினரை குறிவைத்து அதனை விற்பனை செய்து வருகிறது.

    மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. குறிப்பாக கல்லூரி, மற்றும் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இந்த கும்பல் கஞ்சா விற்பனை செய்கிறது.

    இதில் பெண்களும், மூதாட்டிகளும் ஈடுபடுவதால், பலருக்கு சந்தேகம் ஏற்படுவதில்லை. மதுரை நகர் பகுதியான பெரியார் பஸ் நிலையம், வைகை ஆற்றுப்பகுதி, வண்டியூர், கீரைத்துறை, சிந்தாமணி மற்றும் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, சேடப்பட்டி, திருமங்கலம், பேரையூர், செக்கானூரணி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது.

    மதுரை புது விளாங்குடி பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா விற்பதாக செல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து சுற்றி வந்தனர். அப்போது மறைவான இடத்தில் கஞ்சா விற்ற புது விளாங்குடியை சேர்ந்த முத்துவேல் (வயது 21), சூரிய பிரபாகரன் (28), அம்பட்டையன்பட்டி பீமராஜா (41), செல்லூர் அகிம்சாபுரம் அஜீத் (22), பழங்காநத்தம் சுரேஷ் (45) , தேனி மாவட்டம் வருசநாடு வசந்தி (48), கம்பம் கிருஷ்ணவேணி (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
    ×