search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madona"

    • அவர் குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.
    • மடோனாவின் பாக்டீரியா தொற்றுக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    பாப் இசை பாடல்களின் ராணியாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் அமெரிக்க பாடகி மடோனா (64). சில நாட்களுக்கு முன் இவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. மயக்கமடைந்த அவரை உடனடியாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாச சீராக்கத்திற்காக இண்டுபேஷன் (intubation) சிகிச்சை வழங்கப்பட்டது.

    மடோனாவிற்கு, ஏற்பட்ட "தீவிர பாக்டீரியா தொற்று" குறித்து முதலில் அவரது மேலாளர் தகவல் பகிர்ந்தார். கடும்தொற்றால் அவர் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டதால், அவர் குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பிறகு, மடோனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது வீட்டில் இருக்கிறார் என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அவர் வரும் வாரங்களில் 7-மாத உலக சுற்றுப்பயணத்தை தொடங்கவிருந்தார். ஆனால், நோய் தொற்று சிகிச்சையினால் அவர் அதை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.

    அவர் நலமாக தனது வீட்டிற்கு ஒரு தனியார் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தனது உடல்நலம் சார்ந்த விஷயங்களில் செய்திகள் எதுவும் வெளியிட விரும்பாத மடோனா, தனது விரிவான உலகச் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஒத்திகையின் இறுதிக் கட்டத்தில் இருந்தார்.

    இரண்டு வாரங்களில் கனடாவில் "செலிப்ரேஷன் டூர்" என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள 45 நகரங்களுக்கு செல்வதற்காக அவர் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்பட்டார். இசைத்துறையில் ஈடுபட்டு 40 ஆண்டுகள் ஆவதை கொண்டாடவிருந்த இந்த பயணம் திட்டமிட்டபடி நிகழ்ந்திருந்தால், இது அவரது 12வது சுற்றுப்பயணமாக அமைந்திருக்கும்.

    மடோனாவிற்கு உடல்நலம் குறைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வந்ததிலிருந்து உலகெங்கிலும் இருந்து அவர் பூரண நலமடைய வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருந்தன.

    மடோனாவின் பாக்டீரியா தொற்றுக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மருத்துவர்கள் இது மிகவும் தீவிரமானதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை தேவைப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

    பிரேமம் படம் மூலம் பிரபலமான மடோனா செபஸ்டியன், முத்த காட்சிக்கு நடிக்க மறுத்ததால் 3 படங்களை இழந்தேன் என்று கூறியிருக்கிறார். #MadonaSebastian
    பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான மடோனா செபஸ்டியன் ஜுங்கா படம் மூலம் விஜய்சேதுபதியுடன் 3வது முறை இணைந்து இருக்கிறார். அவரிடம் பேசினோம்.

    ஜுங்காவில் கவுரவ வேடத்தில் நடித்தது விஜய்சேதுபதிக்காகவா?

    விஜய்சேதுபதி என்மீது அபார நம்பிக்கை வைத்திருக்கிறார். அதுதான் முதல் காரணம். கதையை கேட்டேன். என் கதாபாத்திரம் மிகவும் பிடித்தது. எனவே சம்மதித்தேன். 5 நிமிடங்கள் வந்தாலும் பரவாயில்லை. ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம்.

    தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று 4 மொழிகளில் நடிக்கும் அனுபவம்?

    நான் புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருக்க விரும்புவேன். எனவே மொழி பிரச்சினை இல்லை. எந்த மொழியாக இருந்தாலும் முன்கூட்டியே வசனங்களை வாங்கி வைத்து அதை மனப்பாடம் செய்துகொள்வேன். தமிழும் கற்றுக்கொண்டு வருகிறேன்.



    விஜய்சேதுபதி உங்களது அர்ப்பணிப்பை புகழ்கிறாரே?

    எனக்கு அப்படி எதுவும் தெரியவில்லை. அவரது பாராட்டு எனக்கு ஊக்கம் அளிக்கிறது. இன்னும் நன்றாக பண்ண வேண்டும் என்ற பொறுப்பு வருகிறது. ஒவ்வொரு படம் பார்க்கும்போதும் அதில் இருந்து ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்கிறேன்.

    எப்படி படம் தேர்வு செய்கிறீர்கள்? 

    முதலில் கதை என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்பேன். அடுத்து எனது கதாபாத்திரத்தின் தன்மை. முக்கியமாக இயக்குனரின் திறமை. இவைகளுக்கு பிறகு தான் சம்பளம் உள்ளிட்ட மற்ற வி‌ஷயங்கள்.

    காதல் அனுபவம்?

    என்னுடைய தனிப்பட்ட வி‌ஷயங்களை பேச விரும்பவில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்தால் வெளிப்படையாக அறிவிக்க தயங்க மாட்டேன்.

    நீங்கள் அணியும் உடைகள் வித்தியாசமாக இருக்கிறதே?

    நான் இதை கவனித்தது இல்லை. ஆடைகள் நமது குணத்தை பிரதிபலிக்கும். எனவே பார்த்து பார்த்துதான் தேர்வு செய்வேன்.

    அதிகம் படங்களில் பார்க்க முடியவில்லையே?

    ஆமாம். லிப்லாக் முத்தத்திற்கு மறுத்ததால் கடந்த 3 மாதங்களில் 3 படங்களை இழந்துள்ளேன். அதற்கு எல்லாம் இப்போது நான் தயாராக இல்லை. கட்டிப்பிடிக்கும் காட்சியில் முதல்முறை நடித்தபோது அம்மாவுக்கு போன் பண்ணி அழுதிருக்கிறேன். அதுபோல நடிப்பது சிரமம். நான் கூச்ச சுபாவம் கொண்டவள். பிறரிடம் பேசவே பயப்படுவேன். எனக்கு ஒரு சின்ன தங்கை இருக்கிறாள். அவளுடன் நேரம் செலவிடவே அதிகம் விரும்புவேன்.



    நடிப்பு தவிர எதில் ஆர்வம்?

    நான் அடிப்படையில் ஒரு பாடகி. சொந்தமாக ஒரு இசைக்குழு நடத்தி வருகிறேன். ஆனால் படங்களுக்கு இசை அமைக்கும் அளவுக்கு நம்பிக்கை இல்லை.

    மலையாள நடிகர் சங்கத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதே?

    நான் எந்த சங்கத்திலும் உறுப்பினராக இல்லை. இந்த வி‌ஷயத்தில் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.

    நடிகை என்றால் பொது இடங்களில் தொல்லைகள் வருமே?

    ஆமாம். நடிகைகளும் சாதாரண மனிதர்கள் தான். இதை அனைவரும் உணர வேண்டும். நான் பெண்ணியவாதி அல்ல. ஆனால் ஆணும் பெண்ணும் சமமாக மதிக்கப்படவேண்டும். தனி மனித உரிமை மிக முக்கியம்.
    ×