என் மலர்
நீங்கள் தேடியது "Madhavaram robbery"
மாதவரத்தில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாதவரம்:
மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நிற்காமல் வேகமாக சென்றது.
எனவே அதை போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். அதில் இருந்த கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்த பைசல் ரகுமான் (22), அவரது நண்பர் திருவொற்றியூர் ராஜ ராஜன் நகரை சேர்ந்த கார்த்திக் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் வழிப்பறி திருடர்கள் என தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், ரூ.1500 ரொக்க பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. முன்னாள் குற்றவாளிகளான இவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து விடுதலை ஆனார்கள்.






