search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "LPG Price Hiked"

    சமையல் கியாஸ் விலை இன்று முதல் ரூ.2.89 உயர்த்தப்பட்டு உள்ளது. #Subsidised #LPG #GasCylinder
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது.

    இதேபோல் அவ்வப்போது சமையல் கியாசின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை டெல்லியில் ரூ.59 உயர்த்தப்பட்டு உள்ளது. மானியம் உள்ள சிலிண்டர் 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்த விலை உயர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்று இந்தியன் ஆயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    கியாஸ் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை இந்த மாதத்தில் இருந்து (அக்டோபர்) ரூ.376.60 ஆக உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) வரை இந்த மானியத்தொகை ரூ.320.49 ஆக இருந்தது.

    எனவே இந்த விலை உயர்வு காரணமாக சாமானிய மக்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இல்லை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.  #Subsidised #LPG #GasCylinder 
    மானியத்துடன் கூடிய சமையல் கியாஸ் சிலிண்டர் விலை நேற்று நள்ளிரவு முதல் ரூ.2.83 அதிகரித்தது. #Cylinder #Subside
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அன்னிய செலாவணி விகிதம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மானியம் உடைய மற்றும் மானியமில்லா சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை மாதந்தோறும் 1-ந் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. அந்தவகையில் இந்த மாதத்துக்கான, சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன.

    இதில் மானியத்துடன் கூடிய சிலிண்டர் ஒன்றுக்கு சென்னையில் ரூ.2.83 அதிகரித்து உள்ளது. இதன் மூலம், ரூ.481.84 ஆக இருந்த மானிய சிலிண்டர் விலை இனி ரூ.484.67 ஆக உயர்கிறது.

    இதைப்போல மானியமில்லா சிலிண்டருக்கும் சென்னையில் ரூ.58.00 உயர்ந்துள்ளது. அதன்படி ரூ.712.50 ஆக இருந்த சிலிண்டர் விலை 770.50 ஆக உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

    உள்நாட்டு மானியமில்லா சிலிண்டர்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையில் ஜி.எஸ்.டி. அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் சர்வதேச சந்தையில் திடீர் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இந்த விலை உயர்வு நடவடிக்கை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 
    ×