என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lourdes apparitions"

    • அர்ச்சிப்பு விழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
    • அன்பின் விருந்து ஆலய வளாகத்தில் நடக்கிறது.

    மார்த்தாண்டம் அருகே மேல்புறம் தல திருச்சபையின் கிளை பங்காகிய பரக்கோணத்தில் புனித லூர்து அன்னை ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் சாதி, மத பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களின் பொருளாதார உதவியால் அழகுற புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    அர்ச்சிப்பு விழா நாளை(வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி ஆலயத்தை அர்ச்சித்து வைக்கிறார்.

    தொடர்ந்து அன்பின் விருந்து ஆலய வளாகத்தில் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஆல்வின் விஜய், பங்கு பேரவை துணைத்தலைவர் விஜயகுமார், செயலாளர் வைடா பொன்மலர், பொருளாளர் ஸ்டீபன், உதவி செயலாளர் டெய்சி மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

    • பழைமையான இந்த கெபி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நடந்தது.
    • இரவு அன்பின் விருந்து நடந்தது.

    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்டில் புனித வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி புனிதர் தேவசகாயம் ஆலயம் என இரட்டை திருத்தலம் உள்ளது. அதோடு இங்கு புனித லூர்து அன்னை கெபியும் அமைக்கப்பட்டுள்ளது. பழைமையான இந்த கெபி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிப்பு விழா நேற்று நடந்தது. தேவசகாயம் மவுண்ட் பங்குத்தந்தை பிரைட் தலைமை தாங்கினார். இணைபங்குதந்தை ரெட்வின், பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், புனித லூர்து அன்னை கெபியை அர்ச்சித்தார். தொடர்ந்து குறும்பனை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமையில் திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் கோட்டார் மறைமாவட்ட அருட்பணியாளர்கள், பங்கு பேரவை பொருளாளர் பென்சிகர், துணைச்செயலாளர் சகாயரூபிலெட், பங்கு பேரவை முன்னாள் துணைத்தலைவர் பயஸ் ராய், கவுன்சிலர் ஜெனட் சதீஷ்குமார் மற்றும் பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்குமக்கள் திரளாக கலந்துகொண்டனர். இரவு அன்பின் விருந்து நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணைபங்கு தந்தை ரெட்வின் மற்றும் பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்திருந்தனர்.

    ×