என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry crash woman dies"

    சென்னை பிராட்வே பிரகாசம் சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதிய விபத்து பெண் பலியானார்.
    ராயபுரம்:

    கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் ரேவதி (வயது 42). இன்று மதியம் அவர் உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் பிராட்வே பிரகாசம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ரேவதி சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் வந்த உறவினர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ரேவதி தனது மகனுக்கு அடுத்த மாதம் திருமண ஏற்பாடு செய்திருந்தார். இதற்குள் அவர் விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ×