என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Long Jump National Record"

    19 வயது இளம் வீரரான ஸ்ரீஷங்கர் நீளம் தாண்டுதலில் 8.20 மீட்டர் தூரம் தாண்டி தேசிய சாதனையை முறியடித்துள்ளார். #NationalRecord
    ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 58-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்ஸ் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது இளைஞரான ஸ்ரீஷங்கர் முரளி 8.20 மீட்டர் தூரம் தாண்டி முதல் இடத்தை பிடித்தார்.

    அத்துடன் தேசிய சாதனையும் படைத்தார். இதற்கு முன் அங்கித் ஷர்மா 8.19 மீட்டர் தாண்டியதே சாதனையாக இருந்தது. அதை தற்போது ஸ்ரீஷங்கர் முறியடித்துள்ளார். அத்துடன் இந்த சீசனில் 20 வயதிற்கு உட்பட்ட வீரரின் அதிகபட்ச தூரம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.



    ஸ்ரீஷங்கர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தார். தொடர் தொடங்குவதற்கு முன் ஆபரேசன் செய்து கொண்டதால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் 6-வது இடத்தை பிடித்தார்.
    ×