search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Leaders greetings"

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி சரத்குமார், ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #easterday

    சென்னை:

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    நியாயமும், சத்தியமும், தியாகமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுபிரானின் உயிர்த்தெழுதல் நிகழ்வு உலகளாவிய கிறிஸ்தவ பெருமக்களால் நம்பப்படுகிறது.

    இந்த ஈஸ்டர் நன்னாளில் நாட்டின் மத, இன, மொழி, வேறுபாடுகள் மறைந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் அமைதி, சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நெஞ்சில் உறுதியாக ஏற்போம்.

    சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான வளமான வாழ்வை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். இறைவன் இயேசு கிறிஸ்து அனைவரது உள்ளங்களிலும் புதிய நம்பிக்கையையும், ஒளியையும் ஊட்டுவாராக.

    அனைத்து கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேர முண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடருவதற்கான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வாக்கு எந்திரங்களில் எழுதியிருக்கிறார்கள்.

    தீயவர்களால் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசு பிரான் உயிர்த்தெழுந்து வந்தது கிறித்தவர்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அளித்ததோ, அதேபோன்ற ஆனந்தம் அடுத்த 33 நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அந்த நாளில் தீயவர்கள் வீழ்வது உறுதியாகி விடும்.

    மனிதகுல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, கொல்கதா எனப்படும் கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக சம்பவம்தான், ரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலம் ஆகும்.

    ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை ஒருவனின் தாய் அவனைத் தாங்குவது போல, நான் உன்னைத் தாங்குவேன்’ என்ற உறுதியைத் தரக்கூடிய இந்நாளில், மக்கள் இடையே சமய நல்லிணக்கமும், வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்படக்கூடிய வகையில் அமைந்திட, கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இயேசு பிரான் ஒரு சராசரி மனிதன் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மேலான துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தியாக சுடராக சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மீண்டும் அவதரித்து வந்த நாளை, ஈஸ்டர் தினமாக கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

    கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ:-

    இந்த உலகத்திற்கு தூய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டிய ஏசுபிரான் உயிர்த்த பெரு நாளில் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் குதூகலத் துடனும், வளமுடனும், வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதுடன் உன்னை நீ அன்பு செய்வது போல் பிறரையும் அன்பு செய் என்ற ஏசுவின் பொன்மொழிகளை கடை பிடித்து வாழ்வதுடன் நம் வாழ்வில் தியாகம், கருணை, சமத்துவம், சகோத ரத்துவம் ஆகிய நல்பழக்க வழக்கங்களை மேற்கொள்வோம். அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

    மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனும் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #easterday

    தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் பக்ரீத் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.#Bakrid
    சென்னை:

    பக்ரீத் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    இறைவனுக்கு அஞ்சிய தூய வாழ்வு வாழ்ந்த பெருந்தகை இப்ராஹிம் அவர்கள் இறைவன் தனக்கு விடுத்த அழைப்பினை ஏற்று, தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட முன்வந்த உன்னத நாளை நினைவுகூறும் நாள் தான் “பக்ரீத்” எனப்படும் தியாகத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இறைவனை அஞ்சி, அவரது கட்டளைக்கு ஏற்ப வாழ்வோர் என்றென்றும் நிறை வாழ்வு பெற்றிருப்பார்கள் என்பது தான் இத்திருநாள் நமக்குக் கூறும் பாடம். போற்றுதலுக்குரிய இப்பெருநாளில், இறைவன் திருவுள்ளத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் வாழ உறுதி ஏற்போம்.

    அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த தியாகத் திருநாளாம் “பக்ரீத்” திருநாள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    மனிதருக்கு மனிதர் சுய தேவைகளை குறைத்து, சிறு தியாகங்கள் செய்து, பிறருக்கு உதவி, மத, மொழி, இனப் பாகுபாடுகளை அகற்றி, சமாதானம், சகோதரத்துவம், சகவாழ்வு என்று நபிகள் நாயகம் காண்பித்த நன்னெறியினை பின்பற்ற இத்தியாகத் திருநாளில் சூளுரைப்போம். மதநல்லிணக்கம் ஒற்றுமை காப்போம். சிறுபான்மை மக்களின் நலன் காத்திட செயல்படுவோம்.

    இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் எனும் பக்ரீத் நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பிலும், என் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    தியாகத் திருநாளான பக்ரீத் தியாகத்தை மட்டுமின்றி, ஈகை, மனித நேயம், நல்லுறவு, மாற்றுத் திறனாளிகள் மீதான அன்பு ஆகியவற்றையும் வலியுறுத்துகிறது. பக்ரீத் திருநாளின் போது ஆடுகளை பலியிடும் இஸ்லாமியர்கள் அதை மூன்று பிரிவுகளாக பிரித்து ஒன்றை அண்டை வீட்டார்கள் மற்றும் உறவினர்களுக்கும், மற்றொன்றை ஏழைகளுக்கும் கொடுத்து மூன்றாவது பங்கை மட்டும் தாங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இது ஈகையையும், நல்லுறவையும் வலியுறுத்துகிறது.

    கேரளத்தில் மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதில் கூட இஸ்லாமிய நாடுகள் தங்களின் ஈகைத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பக்ரீத் திருநாளை கொண்டாடாமல் அதற்கான செலவுக்காக வைத்திருந்த தொகையை கேரளத்திற்கு நிவாரண நிதியாக வழங்கி பக்ரீத் திருநாள் வலியுறுத்தும் தத்துவங்களுக்கு வலிமை சேர்த்துள்ளனர்.

    மதசார்பற்ற தன்மையின் பாதுகாப்பில்தான் அனைத்து சமய மக்களின் நல்லிணக்கமும், அமைதி வாழ்வும் நிலைநிறுத்தப்படும். அண்மைக் காலமாக மதவாத சக்திகளால் உருவாக்கப்படும் ஆபத்துக்களை எதிர் கொண்டு முறியடிக்க இத்திருநாளில் உறுதி கொள்வோம்.

    தமிழ்நாட்டில் காலங்காலமாக உறவுமுறை கூறி, உணர்வுபூர்வமாக ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் முஸ்லிம் பெருமக்கள், இந்நாளில் சகோதர சமயத்தாருடன் விருந்துண்டு மகிழ்ந்து, சமய நல்லிணக்கத்துக்கும் சமூக ஒற்றுமைக்கும் வலுச் சேர்க்க வாய்த்திட்ட இந்நாள் ஒரு பொன்னாள் ஆகும்.

    விடுதலைச்சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    ‘குர்பானி’ கொடுக்கும் இந்நாளில் ஏழை எளியோருக்கு அன்னமிடும் கடமையை இஸ்லாமியர் நிறைவேற்றுவதுடன் 5 வகை கடமைகளுள் ஒன்றான ‘ஹஜ்’ என்னும் புனிதப் பயணம் செல்லும் கடமையையும் இந்தப் புனித நாளில் இஸ்லாமியர்கள் நிறைவேற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நன்னாளில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    இஸ்லாமிய சமுதாயத்தினர் சாதி, மத, இன, மொழி ஆகிய வேறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பு மக்களிடமும் ஒற்றுமையோடு பழகுவது சாலச்சிறந்தது.

    நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் பக்ரீத் பண்டிகையும் உந்துதலாக இருப்பது இஸ்லாமியர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

    இறைப்பற்றிலும், கொண்ட கொள்கையிலும் உறுதியாக இருப்பவர்கள் இஸ்லாமியர்கள் என்பது போற்றுதலுக்குரியது. எனவே பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவன் துணை நிற்க வேண்டும்.

    தே.மு.தி.க. நிறுவன தலைவர், பொதுச்செயலாளர் விஜயகாந்த்:-

    இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த அனைவரும், நலமுடனும், எல்லா வளமுடனும், சம வாய்ப்பும், சம உரிமையும் பெற்றிட வேண்டுமென இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன். மனித உறவுகள் உன்னதம் பெற்றிட அன்பை விதைப்போம். பல ஆண்டு காலமாக நான் தே.மு.தி.க. சார்பில் இஸ்லாமிய நண்பர்களுடன் இணைந்து, குர்பானி வழங்கி, தியாகத் திருநாளை கொண்டாடி வருகிறேன்.

    அதே போல் இந்த ஆண்டு கோயம்பேடு தலைமை கழகத்தில் நாளை மாலை 5 மணியளவில் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த பெரியோர்கள், தாய்மார்கள், இளைஞர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்களோடு குர்பானி வழங்கி பக்ரீத்தை கொண்டாட உள்ளேன். இதேபோல் தே.மு.தி.க. மாவட்ட நிர்வாகிகளும்,‌ தொண்டர்களும் குர்பானி வழங்கி “இயன்றதை செய்வோம், இல்லாதவற்கே” என்ற கொள்கையோடு பக்ரீத்தை கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா:-

    சகோதரத்துவம், ஒற்றுமையுணர்வு, நிலைகுலையாமை, இரக்கம் மற்றும் தியாகத்தின் செய்தியை நமக்கு உணர்த்தும் திருநாளாக தியாகத் திருநாள் விளங்குகின்றது. இந்தத் திருநாளில் இந்த நற்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், பிறர் இன்பத்தில் மகிழுறும் மனநிலை ஏற்படவும் நாம் உறுதி எடுத்துக்கொள்வோமாக.

    நமது நாட்டு மக்களிடையே சகோதரத்துவமும், அன்பும், கருணையும், இரக்கமும் தழைத்தோங்குவதற்கு இறைவனிடம் பிரார்த்திப்போமாக. கேரளா மக்களுக்கு ஏற்பட்டுள்ள துயரங்கள் நீங்கவும் பிரார்த் திப்போமாக. துயருற்று நிற்கும் அம்மக்களுக்கு நம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முன் வருவோமாக.

    உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை மேற்கொள்ளுவதுடன், விலங்குகளை இறைவனுக்கு பலியிட்டு பின்னர் அதில் ஒரு பகுதியை தங்களுக்கும், மற்றொரு பகுதியை உறவினர், நண்பர்கள், அண்டை அயலார் மற்றும் ஏழை எளியோர்க்கு அளிப்பது வழக்கமாகும். இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு அளிப்பதே ஈகை. இந்த பக்ரீத் ஈகை திருநாள் என்றே இஸ்லாமியர்களால் அழைக்கப்படுகின்றது. ஈகை செய்வதன் மூலம் எல்லாம் வல்ல இறைவனின் பேரன்பை பெறலாம் என்பது இஸ்லாமியர்களின் இறை நம்பிக்கையாகும்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார்:-

    "தியாகத்திருநாள்" எனப்போற்றப்படும் இந்தபுனித பக்ரீத் பண்டிகை தினத்தில் உலகெங்கும் வாழும் மனிதர்களுக்கு அமைதியும், மகிழ்ச்சியும் நிரந்தரமாக கிடைக்க வேண்டும் என்று கூட்டு பிரார்த்தனை செய்வோம்.

    நபிகள் நாயகத்தின் போதனையை மனதில் கொண்டு உலகெங்கும் சமத்துவம் நிலைத்திட, சகோதரத்துவம் தழைத்திட ஒற்றுமையுணர்வுடன் வாழ்வோம்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் சேதுராமன், அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் ஏ.அபுபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோர் பக்ரீத் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். #Bakrid
    ×