என் மலர்

    நீங்கள் தேடியது "Lalu Prasad bail extended"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை மேலும் ஒன்றரை மாதத்திற்கு நீட்டித்து ஜாக்கண்ட் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #LaluBail #FodderScam
    ராஞ்சி:

    மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்தித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் மகன் திருமணத்தில் பங்கேற்பதற்காக லாலுவுக்கு ராஞ்சி சிறைத்துறை பரோல் வழங்கியது.

    பின்னர் லாலுவின் உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி, 12 வார கால ஜாமீன் வழங்குமாறு அவரது வழக்கறிஞர்கள் ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவைப் பரிசீலித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், அவருக்கு 6 வாரம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை பூரணமாக குணமடையாத காரணத்தினால் அவரது ஜாமீனை ஜூலை 3-ம் தேதி வரை நீட்டித்து ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இந்த நிலையில் மருத்துவ காரணங்களுக்காக லாலுவின் ஜாமீனை மேலும் நீட்டிக்க கோரி ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், லாலுவுக்கு ஆகஸ்ட் 17-ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து இன்று உத்தரவிட்டுள்ளது. #LaluBail #FodderScam
    ×