என் மலர்
நீங்கள் தேடியது "Koyambedu motor cycle theft"
போரூர்:
சென்னை எம்.ஜி.ஆர். நகரை அடுத்த ஜாபர்கான் பேட்டை குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் கிஷோர் (21). சாப்ட்வேர் என்ஜினீயர்.
நேற்று இரவு 2மணி அளவில் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள கூவம் ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சைக்கிளில் டீ விற்பனை செய்து கொண்டிருந்த அண்ணா நகர் என்.வி.என். நகரைச் சேர்ந்த முருகன் என்ற வாலிபரிடம் ஆட்டோவில் வந்த 2 பேர் கும்பல் ரூ. 3000 வழிப்பறி செய்தனர்.
இதை கண்ட கிஷோர் தனது மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு ஆட்டோ எண்ணெய் குறிக்கும் படி கூறி கூச்சலிட்டார் இதை கண்ட வழிப்பறி கும்பல் கிஷோரின் இருசக்கர வாகனத்தையும் மேலும் அவரிடமிருந்த ரூ.150 பணத்தையும் பறித்து கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து திருமங்கலம் போலீசில் முருகன், கிஷோர் புகார் அளித்தனர்.
ராமாபுரம் கோத்தாரி நகரில் நேற்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இசக்கிமணி என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்றனர்.
இது குறித்து ராயலா நகர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.






