search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kin of policemen"

    காஷ்மீரில் போலீசாரின் உறவினர்களை பயங்கரவாதிகள் கடத்தி சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KashmirMilitants
    ஸ்ரீநகர்;

    காஷ்மீரின் தெற்கு பகுதியில் சோபியான், குல்காம், அனந்த்நாக் மற்றும் அவந்திபோரா பகுதிகள் அமைந்துள்ளன. இங்குள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் போலீசாரின் உறவினர்களை பயங்கரவாதிகள் சிலர் நேற்று நள்ளிரவு கடத்திச் சென்றுள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பயங்கரவாதி சையத் சலாவுதீனின் மகனை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ள நிலையில் போலீசாரின் உறவினர்களை
    கடத்தி சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #KashmirMilitants
    ×