search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Style Ari Patri"

    • ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு ஊரின் பேமஸ் ஆக இருக்கும்.
    • வெறும் அரிசி மாவு இருந்தாலே போதும்.

    ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு ஊரின் பேமஸ் ஆக இருக்கும். அந்த வகையில் இப்பொழுது நாம் கேரள ஸ்பெஷல் உணவான அரி பத்திரி எப்படி செய்வது என்று தான் பார்க்கப் போகிறோம். அரி பத்திரி என்று பெயரை கேட்டவுடன் இது என்ன புதுவகையான உணவாக இருக்கிறதே என்று குழம்ப வேண்டாம். இதை அரிசி அடை என்றும் சொல்லலாம். இதற்கு அதிகமாக எந்த பொருளும் சேர்க்க வேண்டாம். வெறும் அரிசி மாவு இருந்தாலே போதும். மிகவும் சுலபமாக சூப்பராக செய்து விடலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

    செய்முறை

    இந்த ரெசிபி செய்வதற்கு முதலில் ஒரு கப் அரிசி மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் இது மட்டும் தான் இந்த ரெசிபி செய்ய நமக்கு தேவையான பொருள். ஒரு வேளை உங்களுக்கு இந்த அடை அதிகமாக தேவைப்பட்டால் இதன் அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

    இப்போது அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதிக்கும் பொழுது அதில் உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணையும் ஊற்றி கொதித்த பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் அரிசி மாவை அதில் கொட்டி கை விடாமல் கிண்டுங்கள். அரிசி மாவு நன்றாக வெந்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு வர வேண்டும். அதுவரை கிண்டிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த மாவை தட்டு போட்டு மூடி வைத்து விடுங்கள்.

    பத்து நிமிடம் வரை இருந்தால் கூட போதும் இந்த மாவு ஓரளவுக்கு மிதமான சூட்டிற்கு வந்து விடும். அதன்பிறகு இதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கைகளாலே மிருதுவாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை பிசையும் போது எந்த காரணத்திற்காகவும் மேல் மாவிற்கு எண்ணெய் பயன்படுத்தக் கூடாது. ஒரு வேளை உங்களுக்கு சூட்டின் காரணமாக தோய்க்க முடியவில்லை எனில் நீங்கள் கைகளை தண்ணீரில் தொட்டுக் கொண்டு பிசையலாம்.

    இப்படி பிசைந்த மாவை சப்பாத்தி கட்டையில் வைத்து அரிசி மாவை தொட்டு மெதுவாக திரட்டி கொள்ளுங்கள். இது வெறும் அரிசி மாவு என்பதால் நீங்கள் கோதுமை மாவை திரட்டுவது போல அதிக அழுத்தம் கொடுத்து திரட்டக் கூடாது லேசாக திரட்டினாலே போதும். ஓரங்களில் நிச்சயம் வெடிப்பு போல இருக்கும் அதற்கு நீங்கள் ஒரு சின்ன மூடி வைத்து அழகாக வட்ட வடிவில் செய்து கொள்ளுங்கள்.

    இப்போது அடுப்பில் தவா வைத்து சூடான பிறகு நீங்கள் திரட்டி வைத்திருக்கும் அடையை போட்டு ஒரு காட்டன் துணியை வைத்து மேலே லேசாக ஒட்டி எடுங்கள். அப்போது இது பூரி போல உப்பி வரும். ஒரு புறம் நன்றாக சிவந்த பிறகு மறுபுறம் திருப்பி போட்டு இதேபோல் ஒட்டி எடுத்து விடுங்கள்.

    அடுத்த அடை போடுவதற்கு முன்பாக தவாவை ஒரு முறை டிஷ்யூ பேப்பர் வைத்து துடைத்து விட்டு மறுபடியும் அடையை போட்டு எடுங்கள். அருமையான அரிசி பத்திரி தயார்.

     இந்த ரைஸ் பத்திரியுடன் வெஜிடபிள் குருமா அல்லது பன்னீர் பட்டர் மசாலா இப்படி வைத்து சாப்பிடலாம். அசைவ வகையில் சிக்கன் குருமா கிரேவி போன்ற வகைகளும் வைத்து சாப்பிடலாம் சுவை பிரமாதமாக இருக்கும். இதில் எண்ணெய் சேர்த்து செய்வதில்லை என்பதால் அனைவருமே கூட இதை தாராளமாக சாப்பிடலாம்.

    ×