search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kerala Governor Arif Mohammad Khan"

    • இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான்.
    • இந்து என்பது புவியியல் சொல் என பிரபல சீர்திருத்தவாதியும் கல்வியாளருமான சையது அகமது கான் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், வட அமெரிக்காவில் வசிக்கும் கேரள இந்துக்களின் அமைப்பு சார்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கேரள மாநில கவர்னர் ஆரிப்முகமது கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

    சனாதனம் உயர்த்திக் காட்டிய கலாசாரத்தின் பெயர் தான் இந்து. இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இந்தியாவில் விளையும் உணவை நம்பி வாழ்பவர்கள். இந்திய நதிகளில் இருந்து நீரைக் குடிப்பவர்கள் எவரும் தன்னைத் தானே இந்து என அழைத்துக் கொள்ள உரிமை உண்டு.

    நான் இந்துவை ஒரு மதச் சொல்லாக கருதவில்லை. இந்து என்பது புவியியல் சொல் என பிரபல சீர்திருத்தவாதியும் கல்வியாளருமான சையது அகமது கான் கூறியுள்ளார். இந்து என்பது ஒரு பிரதேசத்தில் பிறந்தவர்களை குறிக்கும் ஒரு சொல் ஆகும். என்னை நீங்கள் இந்து என்றே அழைக்க வேண்டும்.

    ஆனால் நான் ஒரு இந்து என்று கூறுவது தவறு என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கு சதி நடக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×