என் மலர்
நீங்கள் தேடியது "Kaveri water unavailable"
சாயல்குடி:
சாயல்குடி அருகே பிள்ளையார் குளம் ஊராட்சியில் பிள்ளையார் குளம் வெள்ளம்பல் மணிவலை ஆகிய கிராமங்களுக்கு கடந்த ஒரு மாதமாக காவேரி கூட்டுக்குடிநீர் வினியோகம் சரிவர செய்யாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இந்தப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஒரு மாதகாலமாக எங்கள் கிராமத்திற்கு காவேரி கூட்டுக்குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை தற்போது டிராக்டர்களில் விற்கப்படும் குடிநீரை ஐந்து ரூபாய்க்கு இப்பகுதி மக்கள் விலைக்கு வாங்கும் நிலையில் உள்ளனர்.
அன்றாடம் உழைத்து வாழும் எங்களுக்கு தண்ணீருக்கே ஒரு தொகை செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.
இந்தப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே கிணறுகளில் தண்ணீர் கிடைக்கும் கடந்த இரு வருடங்களாக இப்பகுதியில் சரிவர மழை இல்லாததால் அனைத்து தேவைகளுக்கும் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
பிரச்சனை குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடடிவக்கையும் இல்லை.
எனவே காவேரி கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு இந்தப்பகுதியில் சீரான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகிகள் உத்தரவிட வேண்டும் என இந்தப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.






