என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karuna Jain"

    • 2004-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 64 ரன்களை விளாசி இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.
    • எனது குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் தன்னலமற்ற தியாகமும் தான் நான் இத்தனை காலம் சிறப்பாக விளையாடுவதற்கு தூண்டுதலாக இருந்தது.

    இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கருணா ஜெயின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2005 முதல் 2014 வரை விளையாடிய கருணா இந்தியாவுக்காக ஐந்து டெஸ்ட், 44 ஒருநாள் மற்றும் ஒன்பது டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த போட்டிகளில் முறையே 195, 987 மற்றும் 9 ரன்களை சேர்த்துள்ளார்.

    அவர் 2004-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 64 ரன்களை விளாசி இந்திய அணியில் தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.

    ஓய்வு குறித்து கருணா கூறியதாவது:-

    எனது குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் தன்னலமற்ற தியாகமும் தான் நான் இத்தனை காலம் சிறப்பாக விளையாடுவதற்கு தூண்டுதலாக இருந்தது.

    எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எனது பயிற்சியாளர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் துணைப்பணியாளர்கள் உட்பட எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

    ×