search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka transport department"

    • 2021ல் ஓலா, ஊபர் போன்ற சேவைகளுக்கு வெவ்வேறு விகிதம் விதிக்கப்பட்டிருந்தது
    • பீக் ஹவர் கட்டண வசூல் தடை செய்யப்பட்டுள்ளது

    கர்நாடக மாநில அரசு, வாடகை கார்களுக்கான பயண கட்டணத்தை மாற்றியமைத்துள்ளது.

    2021ல், ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலி மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கும், இதர வாடகைக் கார் சேவைகளுக்கும் வெவ்வேறு விகிதங்களில் கட்டணங்கள் வசூலிக்கபட்டன.

    ஆனால், இம்முறை அனைத்து விதமான வாடகைக் கார் பயண கட்டணங்களுக்கும் ஒரே சேவைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    போக்குவரத்து துறை அளித்திருக்கும் கட்டண விகிதம் வருமாறு:

    ரூ.10 லட்சம் மதிப்பிற்கு உட்பட்ட வாகனங்களுக்கான கட்டணம்

    முதல் 4 கிலோமீட்டர் - ரூ.100 (முந்தைய கட்டணம் ரூ.75)

    4 கிலோமீட்டரை கடந்து ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் - ரூ.24

    ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிற்கு உட்பட்ட வாகனங்களுக்கான கட்டணம்

    முதல் 4 கிலோமீட்டர் - ரூ.115

    4 கிலோமீட்டரை கடந்து ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் - ரூ.28

    ரூ.15 லட்சம் மதிப்பிற்கு அதிகமான வாகனங்களுக்கான கட்டணம்

    முதல் 4 கிலோமீட்டர் - ரூ.130

    4 கிலோமீட்டரை கடந்து ஓவ்வொரு கிலோமீட்டருக்கும் - ரூ.32

    இவை தவிர ஜிஎஸ்டி (GST) மற்றும் சுங்க சாவடி கட்டணங்கள் சேர்த்து வசூலிக்கப்படும்.

    மேலே கூறப்பட்ட கட்டணங்களுடன் 10 சதவீதம் கூடுதலாக இரவு நேர பயணங்களுக்கு (இரவு 12:00 மணியில் இருந்து காலை 06:00 வரை) வசூலிக்கப்படும்.

    முதல் 5 நிமிடங்களுக்கு காத்திருப்பு கட்டணம் (waiting charges) கிடையாது. 5 நிமிடங்கள் கடந்து ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1 வசூலிக்கப்படும்.

    பீக் ஹவர் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

    பயணத்திற்கு ஆகும் நேரத்தை கணக்கிடவும் தடை விதித்துள்ள போக்குவரத்து துறை, பயண தூரத்திற்கு மட்டுமே அரசு நிர்ணயித்த கட்டணைத்தை வசூலிக்க ஓட்டுனர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால், இப்புதிய கட்டண விகிதத்தால், பயணிகள் அதிக தொகை தர வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×