search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka Cong"

    கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஷ்வரா அம்மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்றதால் புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் என்பவரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
    புதுடெல்லி :

    சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தது.

    முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமியும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஷ்வராவும் பதவியேற்றனர்.

    இந்நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த பரமேஷ்வரா துணை முதல்வாரானதை தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு, புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். காங்கிரஸ் சட்டசபை உறுப்பினரான ஈஸ்வர் கந்த்ரே என்பவர் காங்கிரஸ் புதிய செயல் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    48 வயதாகும் தினேஷ் குண்டுராவ் ஏற்கெனவே பரமேஷ்வராவிற்கு கீழ் கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவராக பதவி வகித்த அனுபவமுடையவர். பெங்களூருவில் உள்ள காந்திநகர் சட்டசபை தொகுதியில் இருந்து தினேஷ் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் சித்தராமையா தலைமையிலான கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உணவுத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.
    ×