என் மலர்
நீங்கள் தேடியது "Kanchipuram young women suicide"
திருவண்ணாமலை அருகே காஞ்சீபுரத்தை சேர்ந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருவிடைகுழி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 52). இவரது மகள் ரம்யா (24), காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள வெள்ளகுளம் கூட்ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் ரம்யா விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






