search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JJ Hospital"

    • ஜே.ஜே. ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சிங் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.
    • பாதாள அறை 1890-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

    மும்பை :

    மும்பை பைகுல்லாவில் கடந்த 1843-ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ந் தேதி அரசு ஆஸ்பத்திரி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது சர்ஜாம்ஷெட்ஜி ஜே.ஜிபாய் என்பவர் அங்கு ஆஸ்பத்திரி கட்டுவதற்காக ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கினார். இதனால் அவரது பெயரில் ஜே.ஜே. ஆஸ்பத்திரி கட்டப்பட்டு தொடங்கப்பட்டது.

    தற்போது அந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சிங் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இந்த நர்சிங் கல்லூரி கட்டிடத்தில் நீர் கசிவு ஏற்பட்டதை அடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கட்டிடத்தை ஆய்வு செய்தனர்.

    இந்த நர்சிங் கல்லூரி சுவர் அடிப்பகுதியில் ஒரு துளையை கண்டனர். இந்த துளையை ஆராய்ந்த போது உள்ளே சுரங்கப்பாதை இருப்பதை போல இருந்தது. சுவரை பெயர்த்து பார்த்த போது உள்ளே 200 மீட்டர் நீளத்தில் பாதள அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த பாதாள அறை 1890-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதாக கல்வெட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது.

    இந்த அறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டாக பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

    இது பற்றி ஆஸ்பத்திரி டீன் டாக்டர் பல்லவி சாப்லே கூறுகையில், "இங்கு பாதாள அறை இருப்பதாக ஏற்கனவே அறிந்து இருந்தோம். ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ வரைபடம் எதுவும் கிடைக்காததால் தேடும் பணியை கைவிட்டோம். தற்போது கண்டறியப்பட்ட இந்த பாதாள அறை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்" என்றார்.

    ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியில் கண்டு்பிடிக்கப்பட்ட 132 ஆண்டு பழமையான பாதாள அறையை அங்குள்ள ஊழியர்கள் மற்றும் அங்கு வருபவர்கள் ஆச்சரியமாக பார்வையிட்டு வருகிறார்கள்.

    ×