என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jisna Mathew"

    20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்ஸ் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜிஸ்னா இறுதி வாய்ப்பை இழந்தார். #JisnaMathew
    20 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப்ஸ் தொடர் பின்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜிஸ்னா மேத்யூ கலந்து கொண்டா்ர. இவர் அரையிறுதிக்கு முன்னேறினார்.

    அரையிறுதியில் ஐந்தாவது இடம்பிடித்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தார். அரையிறுதியில் 53.86 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 5-வது இடம்பிடித்தார்.

    ஜப்பானில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் இந்திய வீராங்கனை ஜிஸ்னா மேத்யூ தங்கம் வென்றார்.
    ஜப்பான் கிஃபு நகரில் ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்தில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

    இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய வீராங்கனை ஜிஸ்னா மேத்யூ 53.26 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார். இலங்கை வீராங்கனை (54.03) வெள்ளிப் பதக்கமும், சீன-தைபே வீராங்கனை (54.74) வெண்கல பதக்கமும் வென்றனர்.



    இதுபோன் இன்று இந்தியா ஐந்து வெண்கள் பதக்கம் வென்றது. இந்தியா இரண்டாவது நாள் முடிவில் இரண்டு தங்கம், ஒரு வெள்ளி, 7 வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
    ×